ஆணையை மீறியவர்களுக்கு அபராதம், சிறை

கோலாலம்பூர்,ஏப்ரல் 24-

கூடல் இடைவெளி காடுப்பாட்டு ஆணையை மீறியதற்காக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களால்  சிறையில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட 105 நபர்களில் வெளிநாட்டினரரும் அடங்குவர்.

அவர்களில் சிலர் உணவு வாங்குவது, உறவினர்களின் வீட்டிற்குப் பிரார்த்தனை செய்வதற்கும், நாய்களுக்கு உணவளிக்கவும் வீட்டை விட்டு வெளியேறுவது உட்பட ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் 13 முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள். அனைவரும் ஏப்ரல் 13 முதல் 23 வரை இங்குள்ள சுங்கை பீசி, செராஸ், செந்தூல், மஸ்ஜித் இந்தியா, கெப்போங்,  ஜாலான் துன் ரசாக் ஆகிய இடங்களில் குற்றம்புரிந்தபின்  கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 19 முதல் 31 வயதுக்குட்பட்ட இரு ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதம் அல்லது  மூன்று மாதம் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. அவர்கள் மக்கள் கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இவர்கள் காரணமின்றி வேறு பகுதிக்குச் சென்றவர்கள்.

ஏப்ரல் 7 , 19 ஆம்  தேதிகளில் முறையே பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை தெற்கு ரவாங் டோல் பிளாசா, ரவாங் , ஜாலான் மெலாத்தி, குவாங், கோம்பாக் ஆகிய இரு இடங்களிலும் இந்த குற்றத்தைச் செய்தனர்.

அம்பாங் நீதிமன்றத்தில், ஒரு யேமன், ஒரு பங்களாதேசி , நான்கு பதினம வயது சிறுவர்கள் உட்பட 17 பேர், 17 வயதுடையவர்கள், இதே குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

17 முதல் 46 வயதிற்குட்பட்ட, அவர்கள் பல இடங்களில் பிடிபட்டனர், அவர்களில் அம்பாங், ஜாலான் பாண்டான், தாமான் யூகே பெர்டானா, ஜாலான் பெசார் லெபோ ராயா ஆம்பாங், தாமான் ஸ்ரீ பாயூ தாமான் கோசாஸ், தாமான் முடா, தாமான் மலாவத்தி, பாண்டான் ஜெயா , இவை அனைத்தும் ஏப்ரல் 14 முதல் 17 வரை காலை 10.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை நடந்வையாகும்.

குற்றவாளிகளுக்கு 500வெள்ளி, 800வெள்ளிக்கும் இடையில் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அல்லது ஒரு மாத சிறை தண்டனைக்கு உட்பட்டவர்கள்.

பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில், இந்தோனேசியர், பங்களாதேசி, ஒரு பிலிப்பைன்ஸ், ஒரு யேமன் மற்றும் ஒரு சோமாலியன் உள்ளிட்ட ஆறு வெளிநாட்டினர் உட்பட 15 நபர்களுக்கு இக்குற்றத்திற்காக 700வெள்ளி முதல்  1,000  வெள்ளி  வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 4 முதல் 19 வரை கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அபராதம் செலுத்தத் தவறினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏழு முதல் 14 நாட்கள் வரை சிறைவாசம் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here