அரட்டைப் பேர்வழிகள் அள்ளிச் செல்லப்பட்டனர்

கப்பளா பாத்தாஸ், ஏப் 27-

வடக்கு செபராங் பிறை வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25) பல்வேறு இடங்களில் பொழுது போக்கு அரட்டையில் ஈடுபட்ட 15 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பட்டர்வொர்த், தாசெக் குளுகோர், மாக் மாண்டின், ஶ்ரீபினாங் ,  பெர்த்தாம் பெர்டானாவைச் சுற்றி 11 மலேசியர்கள், மூன்று மியான்மார் நாட்டினர், ஒரு பங்களாதேசி ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.

மக்கள் நடமாட்ட கூடை இடல்வெலி கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக அவர்கள் பிடிபட்டதாக வடக்கு செபராங் பிறை ஓசிபிடி உதவி கமிஷனர் நூர்ஜைனி முகமட் நூர் தெரிவித்தார்.

கூத்தும் கும்மாளமுமாய் இருந்த அவர்களை அரட்டையடிக்கும்போது ரோந்து காவல்துறையினர் அவர்களை இழுத்துச் சென்றனர்.

34 முதல் 41 வயதுடைய மூன்று உள்ளூர்வாசிகள் மாக் மாண்டினில் பிடிபட்டனர், 16 முதல் 20 வயது வரையிலானவர்கள் ஆறு உள்ளூர்வாசிகள் ஶ்ரீ பினாங்கில் பிடிபட்டனர்.

பிடிபட்ட மியான்மர், பங்களாதேசி பிரஜைகள் செல்லுபடியாகும் தங்கள் பயண ஆவணங்களைக் காட்டத் தவறிவிட்டனர்.

இவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here