கோட்டா கினபாலு , ஏப்.27-
மலேரியா நோய்த்தொற்று தொடர்பான எந்தவொரு பதிவையும் 2018 முதல் சபா பதிவு செய்யவில்லை என்று சபா சுகாதார இயக்குநர் டத்தோக டாக்டர் கிறிஸ்டினா ருண்டி தெரிவித்தார்.
சமூகத்தின் அனைத்து தரப்பின் ஒத்துழைப்புடன், கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்று சபா சுகாதாரத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னணிப்பனியாளர்கள் வலுவாகச் செயல்படுகிறார்கள் என்று அவர் நம்பிக்கைத்தெரிவித்தார். இதற்கிடையில் உலக மலேரியா தினம் பூஜ்ஜியம் மலேரியா வழக்கை தொடர்ந்து பராமரிப்போம், என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
டாக்டர் கிறிஸ்டினா கூறுகையில், சபா 2018 முதல் மலேரியாவை பதிவு செய்திருந்தாலும் குரங்குகளால் ஏற்படும் ஜெனட்டிக் மலேரியா, மாநிலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேரியா வழக்குகள் இன்னும் உள்ளன என்றார்.
ஏப்ரல் 18 இன் நிலவரப்படி, பல்வேறு ஆதாரங்களில் இருந்து 407 மலேரியா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 43 சதவீதம் குறைந்துள்ளது, என்று அவர் கூறினார், மேலும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) அமல்படுத்தியதே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று அவர் கூறினார்