வெள்ளம் ஏற்படுவதைத்தடுக்க மாற்றுவழி என்ன?

ஈப்போ, ஏப்.27-

இடியுடன் கூடிய மழை அடிக்கடி நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால், தாமான் தேசா இம்பியன்,  புக்கிட் மேரா புதிய கிராமத்தில் வசிப்பவர்கள் ஈப்போ நகராண்மைகழகம் பேராக் வடிகால் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்) அந்தந்த பகுதிகளில் வெள்ளத்தைத் தணிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள் .

புக்கிட் மேராவில் வசிக்கும் வோங் சின் ஹாங் என்பவர் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை கூறுகிறார்.

ஜலான் மேரா 1/4  இல் வசிக்கும் 34 வயதான விரிவுரையாளர் ஒருவர்,  சாலையோர வடிகால்கள் மழை கொட்டும்போது நிரம்பி வழிகிறது என்கிறார்.

எனது வீட்டிற்கு அருகிலுள்ள வடிகால் அமைப்பு அடைக்கப்பட்டுள்ளதாக நான் சந்தேகிக்கிறேன், இதனால் எனது வீட்டின் முன் சாலையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது, என்று அவர் கூறினார், தண்ணீர் மட்டம் குறைய சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவேண்டும் என்கிறார் அவர்.

நகராண்மைக் கழகம் அல்லது ஜே.பி.எஸ் இந்தப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வு காணும் என்று நம்புவதாக வோங் கூறினார்.

கடந்த சில வாரங்களாக பேராக் மாநிலத்தில் பல இடங்களில்  புயல் வீசியது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25), கம்போங் ஶ்ரீ கிளேபாங்கில் ஒரு மசூதி ஒரு புயலின் போது சரிந்தது.

சுமார் 800 மீ தொலைவில் உள்ள கம்போங் செப்பர் தலாம் என்ற இடத்தில் ஒரு மரம் வேருடன் காரின் மீது விழுந்தது.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, இடியுடன் கூடிய மழையால் பாசீர் பிஞ்சியில் சுமார் 80 வீடுகள் 30 கடைகள் சேதமடைந்தன.

தாமான் தேசா இம்பியான் குடியிருப்பாளர் ஸ்டீவன் என்ஜி தனது வீட்டிற்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகக் கூறுகிறார்.

62 வயதான தொழிற்சாலை தொழிலாளி, பருவமழை வடிகால்களில் தண்ணீர் விரைவாக வெளியேறுவதில்லை, இதனால் அது நிரம்பி சாலைகளில்  வழிகிறது என்கிறார்.

வெள்ளத்தைத் தணிக்கும் திட்டம் நடத்தப்பட்டிருந்தாலும், வெள்ளம் இன்னும் ஏற்படுகிறது  என்று அவர் கூறினார், நிரம்பி வழியும் நீர் வீட்டின் முன் சாலையில் நிரம்பி வழிகிறது.

மழைக்காலங்களில் அருகிலுள்ள நீர் சேமிப்பு  குளம் அதன் கொள்ளளவுக்கு ஏற்றதாக இல்லை.

அருகிலுள்ள சுங்கை பிஞ்சிக்கு தண்ணீரைத் திருப்ப மற்றொரு வடிகால் அமைப்பையும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here