கோவிட்-19 பினாங்கு க்ளெனீகல்ஸ் மருத்துவமனை ஊழியர் இருவர் பாதிப்பு

ஜார்ஜ் டவுன்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்துள்ளதாக பினாங்கு  க்ளெனீகல்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இருவருக்கும் தொற்றின் தாக்கம்  இருக்கிறதா என்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டு  உறுதி செய்யப்பட்ட பின் பினாங்கு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து ஊழியர்களும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் -19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நோய்த்தொற்று கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களின்படி பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யப்பட்டது. பினாங்கு க்ளெனீகல்ஸ் மருத்துவமனை நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றுகிறது மற்றும் அதன் ஊழியர்களையும் நோயாளிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரிவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படவில்லை, நோயாளிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை அறிந்து மருத்துவமனையில் தங்களின் தற்போதைய பராமரிப்புத் திட்டங்களைத் தொடரலாம்  என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல், பினாங்கு க்ளெனகிள்ஸ் மருத்துவமனை வருகையாளர்களை கட்டுப்படுத்துவது மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலை மற்றும் அறிகுறிகளைச் சரிபார்ப்பது உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திங்கள் (ஏப்ரல் 27) நிலவரப்படி, பினாங்கில் எட்டு உறுதி செய்யப்பட்ட கோவிட் -19 சம்பவங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பினாங்கில் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 121 பேர். அதில் 112 பேர் குணமடைந்தும் ஒருவர் மரணமடைந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here