கிம் ஜாங்.. மலைக்க வைக்கும் உணவு முறையே

சியோல்: எல்லாத்துக்கும் காரணம் மாட்டுக்கறிதான்.. எதை பத்தியும் கவலைப்படாமல், தன்னுடைய சாப்பாட்டில் பீப் கறி, சீஸ், என பொளந்து கட்டி உள்ளார் கிம் ஜாங்.. மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிம்மின் மோசமான உணவுப்பழக்கம்.. அப்போதே எச்சரித்த நிபுணர்கள்

வடகொரியா அதிபர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார், இருக்கிறாரா, இல்லையா? எப்படி எதுவுமே தெரியாத நிலை உள்ளது.. இதனால் ஆளாளுக்கு தெரிந்த கருத்துக்களையும், யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அதே சமயம், கிம் உடல்நிலை பற்றியும் பலரும் கவலை கொண்டுள்ளனர்.. கிம்முக்கு 36 வயசுதான்.. ஆனால் 127 கிலோ உடல் எடையுடன் உள்ளார்.. அதுவே சிகிச்சைக்கு காரணம் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.. தற்போது அவரது முன்னாள் சமையல் கலைஞர் பியூஜிமோட்டோ என்பவர் கிம் பற்றி தன் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் சொல்லும்போது, “உணவு விஷயத்தில் கிம் ஜாங்-க்கு எந்த கன்ட்ரோலும் கிடையாது.. 2015-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 175 பவுண்டுகள் மதிப்பில் 2 பாட்டில் மதுவை மடக் மடக்கென குடித்து முடித்துவிடுவார்.. சாப்பாட்டில் கோப் ஸ்டீக் எம்மெண்டால் சீஸ் போன்றவற்றை சேர்த்து கொண்டார்” என்றார்.

வடகொரியாவில் ஏராளமான மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில், கிம் ஜாங் விருந்து போல் தன்னுடைய சாப்பாட்டை உண்பது சர்வதேச பத்திரிக்கைகளில் விமர்சனமும் செய்யப்பட்டது. ஆனால் அதை பத்திகூட கிம் கவலையே படவில்லை.. 240 பவுண்டுகள் வரை விலை மதிப்பு மிக்க ஜப்பானிய வாகியு பீப், போயி கிராஸ் போன்றவற்றை சேர்த்து கொள்வார்.

சீனப் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருந்து ஒரு சூப் தயார் செய்யப்படும்.. இந்த சூப்புக்கு கிம் ஜாங் அடிமையாம்… இப்படி ஒரு வகைதொகையே இல்லாமல் கிம் சாப்பிட்டதுதான் அவரது இந்நிலைக்கு காரணம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here