கேலியாய் புன்னகைக்கும் காலிப் பர்சுகள்!

தாய்மார்களுக்கு புதிய தலைவலி ஒன்று ஆரம்பமாகியிருக்கிறது. குழந்தைகள் பாராமரிப்பு இல்லங்கள் திறக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோடி காட்டியிருக்கிறார்.

இந்த யோசனை வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது என்பதை தாராளமாக ஒப்புக்கொள்ளலாம். ஆனாலும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், இருவர் 10 கிலோ தூரம் வரை மட்டுமே செல்ல முடியும் என்பது நான்காம் கட்ட நிபந்தனையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். இஃதும் ஒருவகையில் வரவேற்க வேண்டியதே. இப்போதெல்லாம் வணிக வளாகங்களில் அவ்வளவு எளிதாக பொருட்களை வாங்கி வரமுடியாது . அழைத்துச்செல்லும் துணையை பொருட்கள் வாங்க வைத்துவிட்டு காரில் காத்திருக்கும் நிலையாகிவிட்டது. அதனால் வெளியில் செல்ல இருவர் அவசியம் என்பதை வரவேற்கத்தான் வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கியே ஆகவேண்டும் என்றால், வீட்டில் பிள்ளைகளுக்கான பராமரிப்பு வசதியில்லாதவர்கள் பிள்ளைகளையும் அழைத்துதான் போகவேண்டும். அந்த நேரத்தில் பராமரிப்பாளர்களைத்தேட முடியாது. அண்டை அயலார் வீடுகளில் விட்டுச்செல்வதும் ஏற்புடையதன்று.
ஒன்று, இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச்செல்லும் வழிகளை பரிசீலிக்கல்லாம்.

மேலும் வணிக வளாகங்களின் முகப்பில்லேயே முகக்வசம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும் . முகக்கவசம் அணியாமல் உள்ளே அனுப்பதில்லை என்பதாலும் முகக்கவசங்கள உடன் கொண்டுசெல்ல மறந்தாலோ, வணிக முகப்பிடத்தில் வாங்கிக் கொள்ள இது வசதியாக இருக்கும்.

பத்து கிலோ சென்றபின் மீண்டும் வீட்டுக்கு வந்து முகக்கவசம் எடுத்துச் செல்ல அவகாசம் இருக்காது. பிள்ளைகளுக்கும் முகக்கவசம் அணிவித்து அழைத்துச்செல்லலாம். அல்லது வாங்கி அணிவிக்கலாம்.

காரில் அமர்ந்திருக்கும் நேரத்தில் கொள்ளைச் சம்பங்கள் நிகழக்கூடும். அப்போது உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். அது போழ்து வணிகக் காவலர்கள் கார் நிறுத்துமிடத்தில் ரோந்து வரவேண்டும். வணிக்கத்தளங்கள் இதற்கு முன்னுரிமை கொடுக்கவும் வேண்டும்.

வணிகத்தளத்தில் ஒரு பொருளை மட்டுமே வாங்க எண்ணம் கொண்டிருப்பவர்கள் வெகு நேரம் காத்திருக்க முடியாது. பொருட்கள் இருக்கும் பகுதிக்கேற்ப பிரிப்புகள் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கூட்டம் விரைவில் குறையும். இல்லையெனில் பத்து நிமிட வாங்கும் நேரம் சில மணிகளை விழுங்கிவிடும்.

பல இடங்களில் பிள்ளைகளுக்கான விளயாட்டு இடம் இல்லை. அப்போது பிள்ளைகளையும் உடன் அழைத்துச்செல்லத்தான் வேண்டும். பிள்ளைகளை நீண்ட நேரம் வணிக வளாகத்தில் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் பட்ஜெட் இடிக்கும். பர்ஸ் பொக்கை வாய்போல் தெரியும்.

வணிக வளாகங்களில் பிள்ளைகளின் ஆர்வ விளையாட்டு வசதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதைக் கவனத்தில் கொள்வது நல்லது . இன்னும் பிரச்சினகள் இருக்கின்றன. அது பற்றியும் ஆராயலாம்.

அவை, இன்னும் வரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here