ஈப்போ, ஏப்.30-
கொரோனா பாதிப்பில் சிக்கியிருந்த அனைத்து நோயாளிகளும் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.
பேரா மாநிலத்தில் கொரோனா சுழிய நிலைக்குச் சென்றிருப்பதால் பச்சை மண்டலமாக பேரா மாநிலம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசுல் அசுமு தெரிவித்தார்.
பேரா மாநில சுகாதார இலாகாவின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லாய் மெங் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் எனவும் நம்பப்படுகிறது.