உணர்ந்துகொண்டால் உலகம் வசமாகும்

உணர்ந்துகொண்டால் உலகம் வசமாகும்

இந்த ஆண்டு தொழிலாளர் தினம் தனித்துவம் பெற்றிருப்பதாகவே அனைவரும் உணர்கின்றனர். ஏனெனில், இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, குறிப்பாகத் தொற்று நோய்த் தொடர்பை உடைத்து, சோர்வின்றி உழைத்த முன்னணியாளர்கள் நாட்டிற்கு சிறந்ததை வழங்குவதற்கான மனநிலையை உயர்த்தியிருக்கிறது என்பதாகவே அனைவராலும் பேசப்படுகிறது.

தொற்றுநோயால் வேலை இழந்த தொழிலாளர்கள், சுற்றுலாத் துறையினர், சிறு வர்த்தகர்கள், செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனாலும் மக்கள் நடமாட்ட கூடல் இடவெளியை ஆணையை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இப்போது நோய்த்தொற்றுகளின் விளைவு சற்றே குறைந்திருக்கிறது. நேர்மறையான கோவிட் -19 பதிவுகளில் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து கடந்த 16 நாட்களாக, இரட்டை இலக்கங்களில் உள்ளது.

மே 12 வரை நீட்டிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு சரியான நடப்பில் செல்கிறது எனவும் கூறப்பட்டிருக்கிறது. இது, மக்கள் தொற்றின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்றெ பொருளாகிறது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், நேற்றைய நிலவரப்படி, நாட்டில் கோவிட் -19 தொற்று தொடர்பில், 6002 பேரை பாதித்துள்ளது. இதில், 102 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் நல்ல செய்தி என்னவென்றால், மீட்க அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 4,171 ஆகி , மொத்த எண்ணிக்கையில் 69.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதுதான்.

நோன்பின் எட்டாவது நாளில், முஸ்லீம்கள் பலர் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைச் செய்ய இயலவில்லை, ஏழாவது வெள்ளிக்கிழமையாகும். மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையை மதிக்கும் கட்டாயம் இருப்பதால் மசூதியின் தொழுகை தடைபட்டது.

மத விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரி ஆற்றிய உரையில், தொழுகை உள்ளிட்ட மத நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து அமைச்சகம் கவனித்து வருவதாகக் கூறினார்.

மக்களால் மட்டுமே மக்களுக்கு உதவ முடியும் என்பதை இந்த ஆண்டு தொழிலாளர்தினம் உணர்த்துகிறது. அரசு மக்களுக்காத்தான் சட்டங்களை விதிக்கிறது. அது பின்பற்றப்படவில்லையென்றால் அதற்குக்கு காரணம் மக்களாகத்தான் இருக்க முடியும்.

தொழிலாளர் தினக்கொண்டாடமும் மக்களால் உணரப்பட்டிருகிறது. உணர்ந்துகொண்டால் உலகம் வசமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here