சிரம்பான், மே 1-
நெகிரி செம்பிலான் சுகாதார இலாகா அதிகாரிகள் சிரம்பான் சந்தையில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன் வியாபாரிகள் மீதும் காய்கறி வியாபாரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செலாயாங் சந்தையோடு பரிவர்த்தனை கொண்டிருக்கும் சந்தைகளில் சோதனை நடத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டு சிரம்பான் சந்தையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாநில சுகாதார இயக்குநர் டத்தின் டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷிட் தெரிவித்தார்.
சிரம்பான் சந்தையில் 600 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை.
நாள்தோறும் உஷ்ணமானியைக் கொண்டு பரிசோதனை நடத்தப்படும். கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் தனிமைப்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.