மே தகு மோதல் – சாலமன் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா , மே.1-

நெருக்கடி காலங்களில், தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்க விரும்புகிறது மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் என்று அதன் பொதுச்செயலாளர் ஜே. சாலமன அறிவித்திருக்கிறார், ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு, அதைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இப்போது கடினமான காலமாக இருக்கிறது. இச்சூழ்நிலையில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கட்டாயமாகிறது என்கிறார் அவர்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி உத்தரவு (எம்.சி.ஓ) அகற்றப்படும் போது தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைத் திரும்பப் பெற முடியாமல் போகலாம். இதை எண்ணி தொழிலாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

பல நிறுவனங்கள் சம்பள வெட்டுக்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. ஊழியர்களை ஊதியம் பெறாத விடுப்பு எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்துகின்றன. ஆண்டு விடுமுறைகளுக்கு விண்ணப்பிக்கவும் தூண்டுகின்றன.

இவ்விவகாரங்களில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாகவும் சாலமன் குற்றம் சாட்டினார், முதலாளிகள் தங்கள் ஊழியர்களை ஊதியக் குறைப்புகளைப் பெற பயமுறுத்தும் தந்திரங்களைக் கையாள்வதாகவும் புகார்களைப் பெற்றுவருவதாக அவர் கூறினார்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி தூக்கப்படும்போது அவர்கள் வேலைக்குத் திரும்புவர். அப்போது அவர்களுக்கு வேலைகள் இல்லாமல் போகலாம் என்று பலர் அஞ்சுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் முதலாளிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் உருவாகிறது என்றார் அவர்.

வேலைவாய்ப்பு சட்டம் 1955 இன் கீழ், தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகியிருக்கிறது.

ஊழியர்களைப் பாதுகாக்க புதிய விதிமுறைகளை அமல்படுத்துமாறு ஏப்ரல் 14 ஆம் தேதி மனிதவள அமைச்சகத்திற்கு எம்டியூசி கடிதம் எழுதியுள்ளதாக சாலமன் தெரிவித்திருக்கிறார்., ஆனால், அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 7 ஆம் தேதி அனுப்பப்பட்ட மற்றொரு கடிதத்தில், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், பணிநீக்கம் செய்யப்படுவதைத் தடுக்கவும், ஊதியக் குறைப்புகளை எடுக்கவோ அல்லது ஊதியம் பெறாத விடுப்பில் செல்லவோ கட்டாயப்படுத்த, தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ எம். சரவணனிடம் எம்.டி.யூ.சி கேட்டுக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

அரசால் வழங்கப்பட்ட உதவியைக் காரணமாக எடுத்துக்கொண்ட சில முதலாளிகள், தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடாது அல்லது ஊதியக் குறைப்புகளை ஏற்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் எம்டியூசியின் பார்வை அரசாங்கத்தை நோக்கித் திரும்பியுள்ளது என்று சாலமன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here