ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்- ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ,மே 02-

உலகம் முழுவதும் கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் ரஷியாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷியா இருந்தது.

ஒரே மாதத்தில் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ரஷியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.  அங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 7,933 பேருக்கு புதிதாக கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை 70%முதல் 80% வரையே  துல்லியமானதாக இருப்பதால், உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.  அதேபோல் அங்கு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீளமுடியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரஷியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 11-ந்தேதி வரை அமலில் இருப்பது நினைவுகூரத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here