பலரும் நடிகை பிரவீனாவின் துணிச்சலை பார்த்து வியந்தாலும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நாகப் பாம்பை இப்படி கையில் பிடிப்பது சரியல்ல என்றும் சிலர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
குட்டி பாம்பை கையில் ஏந்தியபடி நடிகை பிரவீனா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாமி 2, கோமாளி, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிரவீனா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதுதவிர மலையாள நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.
திருவனந்தபுரம் கரமனையில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரவீனாவின் வீட்டில் உள்ள கோழிக்கூட்டில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு பாம்பு பண்ணைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த ஊழியர்கள் பாம்பைத் தேடி கோழிக்கூட்டிற்குள் பதுங்கியிருந்த குட்டி பாம்பை பிடித்தனர்.
பலரும் நடிகை பிரவீனாவின் துணிச்சலை பார்த்து வியந்தாலும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நாகப் பாம்பை இப்படி கையில் பிடிப்பது சரியல்ல என்றும் சிலர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.