அம்பாங் சந்தையில் ஒருவருக்குத்தொற்று

கோலாலம்பூர்:
சிலாங்கூரில் உள்ள தாமான் தாசெக் தம்பஹான், அம்பாங், சந்தையில் உள்ள ஒருவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அதனால், அப்பகுதியை மூட உத்தரவிட்டதாக அறியப்படுகிறது.

இந்த வழக்கில் சந்தையில் உள்ள வணிகரின் ஊழியர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தாமே முன்வந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், சோதனையில் அவருக்கு தொற்று இருப்பதை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் (எம்.பி.ஏ.ஜே) தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் உசேன் தெரிவித்துள்ளார்.

மே 2 முதல் இச்சந்தை மூன்று நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்திருக்கிறது.

எம்பிஏஜே சந்தையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் சுகாதார அலுவலகம் அனைத்து வர்த்தகர்களுக்கும் ஊழியர்களுக்கும் சோதனைகளை நடத்துகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இயக்கப்படும் பிற சந்தைகளும் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் மாநகர் மன்றம் அறிவித்திருக்கிறது.

இந்த வழக்கு ஏதேனும் பெரிய தொற்றாளர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவந்த் தெரியவில்லை. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான சிலாங்கூரில், தலைநகரான கோலாலம்பூருக்கு அடுத்தபடியாக மிக அதிகமான தொற்றுப் பதிவுகள் உள்ள இடமாக அம்பாங் விளங்குகிறது. 

புதிய கோவிட் -19 வழக்குகள் ஏப்ரல் 16 முதல் சனிக்கிழமைவரை முதல் முறையாக மூன்று இலக்க வரம்பிற்குள் இருந்தன. இவை அனைத்தும் உள்ளூர் பரிமாற்றங்களால் ஏற்பட்டவையாகும்.

சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று 105 புதிய கோவிட் -19 தொற்று நோயாளிகளை அறிவித்துள்ளார். இருப்பினும், புதிய வழக்குகளில் 60, இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் சிவப்பு மண்டல வட்டாரங்களைச் சேர்ந்தவையாகும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here