சிரிப்பதற்கும் தடை: வடகொரியாவில் அமுலில் இருக்கும் விசித்திர சட்டங்கள்

சீனா தவிர்த்து உலகில் எந்த நாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணாத வடகொரியாவில் பல விசித்திரமான சட்டங்கள் அமுலில் உள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உருவான வடகொரியாவில் மொத்தம் 25 மில்லியன் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

வடகொரியா உருவான காலம் தொட்டே, தற்போதைய தலைவரான கிம் ஜாங் வுன் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகிறது. 1980 காலகட்டத்தில் வடகொரியாவில் ஒரு விசித்திர சட்டம் அமுலுக்கு வந்தது. அதாவது, வடகொரிய குடிமகன் ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால், அவரின் மொத்த குடும்பமும் சிறை செல்ல வேண்டும்.

வடகொரியாவில் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே உரிய அனுமதியுடன் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  பொதுமக்களுக்கு அளிக்கப்படும் உள்ளூர் சேவையில், சுமார் 1,000 முதல் 5,500 இணையதள பக்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அனுமதியின்றி எவரும் நாட்டில் இருந்து வெளியேற முடியாது. மட்டுமின்றி வடகொரியாவில் வெறும் 3 மில்லியன் மக்கள் மட்டுமே மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். 2007-ல் ஒருவருக்கு மரண தண்டனையும் இதனால் விதிக்கப்பட்டது.

வடகொரியாவில் அரசு அதிகாரிகள் மட்டும் சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ளலாம். சாலையை பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 8 ஆம் திகதி வடகொரிய மக்கள் சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முன்னாள் தலைவர் கிம் இல் சுங் இறந்த தினம் என்பதால் இந்த ஏற்பாடு. வடகொரியாவில் போதை மருந்து பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here