கோலாலம்பூர்:
தங்கள் தொழில்களை மீண்டும் திறக்க வேண்டுமா? என்று நிறுவனங்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று நிதியமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் இன்று தெரிவித்தார்.
முதலாவதாக, ஓர் அரசாங்கமாக, கிடைக்கக்கூடிய தரவுகளைக் கவனிக்க வேண்டும். முன்பு கூறியது போன்ற நிபந்தனைகள், உலக சுகாதார அமைப்பால் (WHO) அமைக்கப்பட்டவை, அந்நிபந்தனைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது வெற்றிகரமாக இருப்பதால் குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகள் திறக்க ப்பட விருக்கின்றன.
ஆனால், அது மோசமானதா? இல்லை, ஏனென்றால் திறப்பதற்கு முன்பே பல கோணங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது, முக்கியமானது என்னவென்றால், மே 4 முதல் திறக்கப்படும் என்றாலும் இன்னும் தயார் நிலையில் இல்லாத நிறுவனங்கள் அல்லது உணவகங்கள் திறக்க வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மே 4 ஆம் தேதி நிறுவனங்களைத் திறக்க கட்டாயப்படுத்தவில்லை, தயாராக இல்லாத நிறுவனங்கள் இன்னும் இருக்கின்றன. மேலும் அவை ஏற்கெனவே அனைத்துலக வர்த்தகம், கைத்தொழில் அமைச்சகத்திடமும் (மிட்டி) அரசாங்கத்திடமும், ஒரு வாரம் கழித்தே திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளன, ஏனெனில், அவை வெப்பநிலை சோதனை, மேலும் பிறவற்றிற்கு இன்னும் தயாராகவில்லை. எனவே அதற்கு நேரம் தேவை என்றும் அவர் மேலும் கூறினார்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட அனைத்து பொருளாதாரத் துறைகளும் வணிகங்களும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
தனது தொழிலாளர் தின உரையில் , வணிகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி (எம்.சி.ஓ கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர அரசாங்கத்தால் இனி முடியாது என்றார். இது, நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
கோவிட் -19 நோய்த்தொற்று நிலைமையைப் பொறுத்து, அவ்வப்போது பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.