திருப்பிப்போட்டதில் திருப்பங்கள் அதிகம்

கொரோனா என்ற சொல் இல்லாமல் சோறு சமைக்க முடியவில்லை என்று ஆகிவிட்டது. இந்த நேரத்தில் புனித ரமலான் நோன்பையும், அதைத்தொடர்ந்து நோன்புப் பெருநாளையும் கொண்டாட வேண்டுமே என்ற கவலையும் மலேசிய மக்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

இவர்களில், தொழிலாக இருக்கும் அந்நியர்களின் பாடு வெகு திண்டாட்டமாகியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.கொரோனா தொற்று திருப்பிப் போட்டதில் அவர்களின் தினசரி வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வெளிநாட்டினர், மிகவும் ஆபத்தான வேலை செய்கின்றவர்கள்.. இவர்களை ஆங்கிலத்தில் 3 டி வேலைக்காரர்கள் என்பார்க்ள். (dangerous, dirty, and difficult ) என்ற பட்டியலில் இவர்கள் இருக்கின்றார்கள். இப்படிச் சொல்லும்போதே இவர்களின் சிரமம், அன்றாட வாழ்க்கை அவலம் புரியும்.

குறிப்பாக ஒன்றைச் சொல்லலாம். இவர்கள் குனிந்து வேலை செய்தால்தான் உயர்வான கட்டடங்கள் நிமிரும் என்ற நிலை இருக்கிறது. இதற்கு மலேசியர்கள் தயாராக இல்லை. எப்போதுமே தயாராக இல்லை.

இந்த ஆபத்தான் வேலையில் அன்றாட பிழைப்பை ஓட்டுகின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க. கோரோனா வந்ததில் குழும்பிக்கிடக்கின்றனர் என்பது வேதனையான செய்தி. தங்கள் அன்றாட வாழக்கையை ஓட்ட வேண்டும். அதற்கான வடிகால் காய்ந்துகிடக்கிறது. சொந்த நாட்டில் வாழும் குடும்பத்திற்கும் பணம் அனுப்ப வேண்டும். அதற்கும் வழியில்லை.

மத்தளம்போல் இருபக்கமும் இடியில் உழன்றுகொண்டிருக்கும் இவர்களில் நிதி நிலைமை பேராபத்தில் இருக்கிறது என்றே அறியப்படுகிறது. மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையில் வெளியில் செல்ல முடியவில்லை. நண்பர்களின் உதவிகளும் தடைபட்டிருக்கிறது.

வாழ்க்கையில் இது முதல் அனுபவம். குடும்பத்தோடும் ரமலானைக் கொண்டாடமுடியவில்லை. வேலை இடத்திலும் பிரச்சினைகளோடு காலம் கடத்தவேண்டிய அபாக்கிய நிலையில், பகிர்ந்து உணவருந்தி காலத்தைக்கடத்துவதாக இருக்கிறது என்கின்றனர். அருகிலிருக்கும் மசூதிக்குச் செல்லவோ தாராவிக் தொழுகையில் கலந்துகொள்ளவோ முடியவில்லை. இது வருத்தானது என்றாலும். மக்கள் நலன் கருதிய ஆணை என்பதால், அனுசரிக்கவேண்டியது அவசியம் என்கின்றனர்.

புது வித அனுபவத்தைக் ரமலான் கொண்டுவந்திருக்கிறது. இந்த நேரத்தில் வருமானம் இல்லை. ஆனாலும் சொந்த நாட்டில் இருப்பதைவிட பாதுகாப்புக்கு ஏற்ற நாடாக மலேசியாவில் இருப்பதை பாக்கியமாகக் கருதுவதாக வெளிநாட்டினர் கூறுகின்றனர். இந்தோனேசியாவில் 10, 551 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் இருக்கிறது. இவர்களில் 800 மரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here