நல்லத்தனம் இருக்கும்போது கள்ளத்தனம் எதற்கு என்று மிகச்சுலபமாக கூறிவிடலாம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியாமாகுமா?
ஏன் முடியாது என்று கேடபவர்களும் இருக்கிறார்கள். முடியாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். முடியும் என்று சொல்வதற்கும் முடியாது என்று சொல்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக, ஒன்றைச்சொல்லத்தான் வேண்டும். நல்லவர்கள் அதிகம் இருந்தால் அதிக போலீஸ்காரர்கள் தேவைப்படாது . உலகத்தின் எங்கோ ஓரு மூலையில் உள்ள ஒரு நாட்டில் போலீஸ்காரகளே இல்லையாம்! அப்படியென்றால் மக்கள் மகான்களாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது.
இன்றைய உலகில் மற்ற நாடுகளில் ஏன் அப்படியிருக்க முயவில்லை? எதனால் மக்களில் பலர் நல்லவர்களாக இருக்க முடியவில்லை. ஏன் கள்ளத்தனம் புரிகிறார்கள்? அவர்களின் அதிகத் தேவைதான் என்ன வாக இருக்கும்? அதிக ஆசைதான் காரணமா? ஆசையின் அடிப்படை என்ன? பேராசையா? ஆசைக்கு வரைகோடு இல்லை. அது எதுவாகவும் இருக்கலாம்.
வடகொரியா அணு ஆயுதம் செய்வது எதற்காக? வூகானிலிருந்து கொரோனாவை ஏவி விட்டார்களே எதற்காக? வல்லரசு ஆக நினப்பது எதற்காக? மனிதம் அழிகிறதே எதற்காக?
இன்றைய உலகில் வீடமைப்பு முறைகள் கூட தவறாகத்தான் இருக்கிறது என்று ஒருதரப்பு குற்றம் சுமத்துகிறது. வளர்க்கும் பூனையும் சுவரேறித்தான் நடமாட்டத்தை வைத்துக்கொள்கிறது.
வீட்டைச்சுற்றி எழுப்புகின்ற சுவர் மனிதப் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறது. அதுதான் முதலில் கள்ளத்தனத்திற்கான் தூண்டுதல் விதையை நடுகிறது. அதன்பிறகே பிரிவினைப் பேதங்கள் உருவாகின்றன. மெல்ல மெல்ல வளர்ந்து தேவைளின் தேடலை அதிமாகிவிடுகின்றன.
கள்ளத்தனம் நல்லதல்ல என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனாலும் அதைப் பின்பற்ற முடியவில்லை என்பதற்கு மன ரீதியான பாதிப்பு இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்கெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை, ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள் சொன்னால்தான் அது புரிவதுபோல் இருக்கிறது.
கள்ளத்தனத்தால் நாட்டில் பேரழிவுகள் அதிகம் என்பது அரசாங்கத்திற்கே தெரியும். அதிகமான ஊழல்கள் கள்ளத்தனத்தால்தான் உருவாகின்றன. அதைத்தடுக்க அதிகமான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதிகமாகச்செலவு செய்யப்படுகிறது. இது வீணான செலவு.ஆனாலும் வேறு வழியில்லை. கள்ளத்தனம் கூட கொரோனா தொற்றுதான். இதையும் ஒழிக்கத்தான்வேண்டும் எனில் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி தேவைப்படுகிறது.
வெளியில் இருந்து உள்ளே வருவதைக் கண்காணித்தால் இதற்கு முடிவு கட்டிவிடலாம். உள்ளே வந்துவிடுவதைத்தடுக்காவிட்டால் பின் விலைவுகள் விபரீதமாகத்தானே இருக்கும்.
நாட்டின் ஐஜிபி என்ன சொல்கிறார்! கள்ளக்குடியேறிகளால் மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் என்கிறார். இது உண்மையிலும் உண்மை.
மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நோய்களைபரப்பியதாக கதை இல்லை. வந்தவர்களே நோய்களையும் கொண்டுவருக்கிறார்கள். குறிப்பாகக, கள்ளத்தனமாக வருகின்றவர்கள் நோயையும் கொண்டுவருகிறார்கள்.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி அவசியம். மிக அவசியம் அப்படியென்றால் கள்ளத்தனத்துக்குச் சொந்தக்காரார்களைக் களையெடுக்கத்தான் வேண்டும். களையெடுத்தல் என்பது எதுவாகவும் இருக்கலாம். தனித்துவிடல் என்பதில் நிறைய செயற்பாடுகள் இருக்கின்றன. மனிதாபிமானம், அடைக்கலம் என்பதெல்லாம் தொற்று ஒழிப்பு மருந்தாக மாறவேண்டும். இவை அனைத்தும் ஐஜிபி டான்ஶ்ரீ அப்துல் ஹமீட் படோர் கையில் இருக்கிறது.