கோலாலம்பூர், மே 4 –
வணிக, வேலை வளாகங்களில் இருக்கும்போது புதிய மாற்றத்தை வழக்கமாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து முதலாளிகள், ஊழியர்களை மனிதவள அமைச்சகம் கேட்டுக்கொண்டிருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஓர் அறிக்கையில் இதனைக் கூறினார். தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் இணங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த புதிய இயல்பான நடைமுறைகளில், ஒவ்வொரு முறையும் வேலைக்குச் சென்று வீடு திரும்பும்போது, சமூக தூரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறது இப்புதிய மாற்றம். தொழிலாளியின் உடல் வெப்பநிலையை அறிந்து பதிவு செய்தல் போன்ற நடைமுறைகளை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
கை சுத்திகரிப்பு, கையுறைகளையும் பலர் வழங்குகிறார்கள், பணியில் இருக்கும்போது முகக்கவசங்களை அணிந்துகொள்வதுடன் பணியிடத்தில் சுகாதாரம், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது, அதற்கானவற்றையும் வழங்குவது உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதும் கடமைகளில் சிறப்பானதாக மதிக்கப்படுகிறது.
அனைத்து முதலாளிகளும் தரமான இயக்க நடைமுறைகளின் தேவைகளுக்கு மதிப்பளித்து, இணங்குவதை உறுதி செய்வதற்காக, வேலைவாய்ப்பு வளாகங்களுக்கு அமலாக்க அணுகல்கள், ஆய்வுகளைத் தொடர்ந்து நடமுறைப்படுத்திவருகிறது.
தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் அமைச்சில், அதிகாரிகள் (சபா, சரவாக் உட்பட) தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை அதிகாரம் பெற்றவர்கள், தொற்று நோய்களைத் தடுக்கும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் இந்த கடமைகளுக்கு பொறுப்பானவர்களாவர்.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் அலட்சியம் , கட்டுப்பாடு , தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறிய நிறுவனங்கள் அல்லது முதலாளிகளுடன் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர் மேலும் கூறினார்.
கண்ணுக்குத் தெரியாத கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
எனவே, முதலாளிகள் , தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தேசத்தின் நலனுக்காக ஒரு புதிய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் முழு ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் டத்தோ எம்.சரவணன் கேட்டுக்கொண்டார்.