கோலாலம்பூர், மே 4 –
தொழிலாளர் சேம நிதிப்பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் புதன்கிழமை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் மின்னியல் பரிமாற்றங்களும் அடங்கும்.
50,55,60 வயதிற்கான ஓய்வூதிய பணமீட்புக்கான சேவைகளைச் செய்யும் வகையில் சில இடங்களில் மட்டுமே அலுவலகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
மாற்றங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையில், விதிமுறைகளுக்குட்பட்டு சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் மீட்புக்கான பதிவுகளைச்செய்யலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இவற்றில் பினாங்கு, கெடா, கிளந்தான் பஹாங், சபா, சரவா மாநிலங்கள் இன்னும் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
மார்ச் 18 ஆம் நாளுக்குப்பிறகு அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் தேக்க மடைந்தன. பலர் தங்கள் சேமநிதியை மீட முடியாமல் சிரம்மப்பட்டனர். சிலவற்றில் நேர்முக சந்திப்புகளும் அவசியமாகிறது என்று தலைமை செயல்முறை அதிகாரி துங்கு அலி ஸாக்கிரி அலியாஸ் கூறினார்.
திடகாத்திரமானவர்களுக்கான விண்ணப்பங்கள் விரைவாகவே பரிசீலிக்கப்படும் என்றார் அவர். இக்கிளைகளில் கூடல் இடைவெளி கடைப்பிடிக்கப்படும். ஆனாலும், கூட்டங்களைத் தவிர்க்க வருகின்றவர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிச்செய்திருந்தால் நெரிசலுக்கு வசியமில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். அனைத்து தொடர்புகளுக்கும் www.kwsp.gov.my இணையத்தளத்தில் விவரங்கள் பெறலாம்.