பெட்டாலிங் ஜெயா:
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளிலும் வழக்கமானதிலிருந்து பயணிகளின் எண்ணிக்கையில் பாதி மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, இருப்பினும் அவை இயல்பான இயக்க நேரத்தைக் கொண்டிருக்கும்.
தனியார் வாகனங்களைப் பொறுத்தவரை, ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் நான்கு நபர்கள் ஒரே காரில் பயணிக்க அரசு அனுமதித்திருக்கிறது. பொதுப் போக்குவரத்தில் பயணிகளைக் கட்டுப்படுத்தும் முடிவு, பொருளாதார நடவடிக்கைகள் என புதிய நிபந்தனைகள் தொடங்குவதால் பொது வாகனங்களிலும் சமூக இடைவெளியை உறுதி செய்திகொள்ளுமாறு மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, ஒரு பேருந்து 40 பயணிகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும். எந்த நேரத்திலும் 20 பேர் மட்டுமேஒரு பயணத்தில் சவாரி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ரயில் சேவைகளுக்கும் இது பொருந்தும். வழக்கமான பயணிகளில் பாதி மட்டுமே அனுமதிக்க முடியும் என்பது நோய்த்தொற்றை தடுக்கும் முயற்சியாகும் என புத்ராஜெயாவில் நடக்கும் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
பொது போக்குவரத்து சேவைகளை கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு மாற்ற அனுமதிக்கும் முடிவை இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார், வேலைக்குத் திரும்பும் மலேசியர்களின் பயண சிரமத்தைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையாக இது அமையும். அதே வேளை, மக்கள் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்கவே பயணிக்கும் எண்ணிக்கையை பொது போக்குவரத்தில் குறைத்திருப்பதாக அவர் சொன்னார்.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் கடுமையான நிபந்தனைகளின் கீழ் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை அமைந்துள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இணங்குவதை உறுதி செய்வதற்காக, மற்ற பொதுப் பகுதிகள் உட்பட, நிலைமையை அதிகாரிகள் கண்காணிப்பார்கள், இந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
கார்களில் நான்கு நபர்களுக்கு வாய்ப் பளித்திருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே சமூக விலகல் பிரச்சினை எழாது. ஏனெனில் குடும்ப உறுப்பினர்க்ள் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கின்றவர்கள் என்பதால் இம்முடிவு எடுக்க்கப்பட்டது என்றார் அவர்.