பெரும்பாலானவர்கள் புதிய நிபந்தனையை வரவேற்கிறார்கள் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது உண்மைதானா என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது. மக்கள் பலர் குழ்பிக் கிடக்கிறார்கள். இன்னும் பலர் குழப்பத்தைத் தூர வைத்துவிட்டு, தங்களுக்கான காரியங்களில் தடையின்றிச் செயல்படுகிறார்கள்.
உள்ளபடியே மக்கள் அச்சப்படுகிறார்களா? பாரதி சொன்ன வார்த்தையை தேவவாக்காகப் போற்றுகிறார்களா?
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கின்றவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள். இதை பல கோணங்களில் நிரூபித்தும் வருகிறார்கள்.
இந்தியர்கள், ஒன்றைத் தெளிவாகப்புரிந்துகொண்டால் நல்லது என்று ஒரு தரப்பு எச்சரிக்கை விடுக்கிறது. என்ன அது? கொரோனா பயம் உலகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும்போது இந்தியன் எப்படி அசால்டாக இருக்கிறன் எனற ஆச்சரியம் பலரிடம் இருக்கிறது. அதுன் மெய்ப்படவேண்டும்.
மலேசியாவில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை. இல்லையென்று சொல்லிவிடவும் முடியாது. ஏன் இந்தியர்களைத் தொற்று பாதிக்கவில்லை என்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும், ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் பலர் யூகிக்கிறார்கள். என்ன தான் அது?
இந்தியர்களின் உணவு பழக்கம் என்கிறார்கள் சிலர். ரசம் என்கிறார்கள் சிலர். ஏதெல்லாம் நல்லதோ அவற்றையெல்லாம் இந்தியர்கள் சொந்தம் கொண்டாட முடியாமல் போவதுதான் மலேசியாவில் இந்தியர்கள் கண்ட வரலாற்று உண்மை. இது ஒரு புறம் இருக்கட்டும். ரசம் என்களுக்கானது என்கிறான் ஒருவன். பனைமரத்தில் தேள்கொட்டிய கதை இது.
கொரொனா இந்தியர்களைக்கண்டு அஞ்சுகிகறதா? அப்படியும் சொல்ல முடியாது. அஞ்சினால் இந்திய நாட்டில் அதிகமாகியிருக்காது. அப்படியானால், மலேசிய இந்தியர்களுக்கு தொற்று நெருங்கவில்லையே? காரணம் இருக்குமல்லவா? இந்தியர்கள் அசால்டானவர்களா? அப்படித்தான் பலரும் சொல்கிறர்கள். அசால்ட் என்பதன் அசல் அர்த்தம் அலட்சியம்மா? தைரியமா? கடவுள் நம்பிக்கையா? நம்பிக்கை இன்மையா? எதுவாக இருக்கட்டுமே!
ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியர்கள் சித்தர்களின் வம்சம் திருவள்ளுவனின் மரபணுவைக்கொண்டவர்கள். நோய்வருவது பழக்கத்தின் காரணம். தொற்று வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதில் மனிதனின் மடத்தனமும் அடங்கியிருக்கிறது.
அடக்கி ஆளும் வன்மமும் இருக்கிறது. இந்தியனுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. எதிர்த்து நிற்கும் குணமுடையவன். அச்சம் இல்லாதவன். அதன் பின், உணவுமுறை. ரசம்,விஷம் என்றெல்லாம் இருக்கிறது.
அச்சம் இல்லையென்றால் நோயெதிர்ப்பு சக்தி கூடும் என்பது அறிவியல். அச்சம் வேண்டாம் என்று பாரதி சொன்ன பிறகு ஏன் அச்சம் வரப்போகிறது? அதனால்தான் அசால்டாக இருக்கிறான். அதனால்தான் வெளியில் நடமாடத் துணிகிறான். கூடவே பாரதியும் வருகிறான்.
கட்டுப்பாடு என்பது, அவன் காதில் அச்சத்தைக்கட்டிப்போடு என்று விழுகிறதோ? அப்படித்தான் அவன் இருக்கிறான். அவன் தன் வசம் எதையும் வைத்துக்கொள்ளாதவன். அதனால் தான் அசால்டாக கொரோனா அவனிடம் தங்குவதில்லை.
கொரோனா இருந்தாலும் அவனை வெல்ல அதனால் இயலவில்லை. அவனுள்ளே நுழைந்து வாழமுடியாமல் கோரரொனா தானே செத்தும் போகிறது. பிறரிடம் மட்டும் எப்படி கூடுகிறது? அதற்குப்பெயர் பரப்புதல் என்பதாகும். அதைத்தான் அவர்கள் மிகுந்த அக்கறையோடு செய்கிறார்கள். இந்தியன் உண்மையானவன். அவனுக்கு பரப்புதல் என்பது அசால்டானது. அந்தத் துரோகத்தை மட்டும் செய்ய மாட்டான், செய்யவே மாட்டன்.