சிறிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

புத்ராஜெயா, மே 5 –
கோவிட் தொற்றில் சிக்கியிருக்கும் சிறிய நாடுகளுக்கு உதவுமாறு அணிசேரா இயக்கங்களுக்கு பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அழைப்பு விடுத்தார்.
சிறிய நாடுகளுக்கு மருத்துவப் பொருட்கள், மருந்துகள் , தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பெறுவதில் அணுகல்முறை முக்கியமானாது. தேவையானவற்றைக் கையகப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

மக்கள் ஒன்றுபடாவிட்டால், முன்னேறிய நாடுகளின் மருந்துகள், தடுப்பூசிகள் உருவாக்கப்படும்போது சிறிய நாடுகள் ஓரங்கட்டப்படும் என்பது மலேசியாவின் கவலை என்று அவர் குறிப்பிட்டார்.

NAM அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகளை கடுமையாகக் கருத வேண்டும். குறிப்பாக, கோரோனா எனும் உயிர்க்கொல்லித் தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் NAM தொடர்புக் குழுவின் ஆன்லைன் உச்சநிலை மாநாட்டுக் கூட்டத்தில் முஹிடின் பேசினார்.

ஆன்லைன் உச்சநிலை மாநாட்டிற்கு NAM தலைவராக அஜர்பைஜான் நாட்டின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தலைமை தாங்கினார். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அனைத்துலக ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக கோவிட் -19 தொற்றுக்கு எதிரான ஒற்றுமை என்பது உச்சநிலை மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது.

கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு, எதிரான இந்தப் போரில் நாங்கள் தனியாக இல்லை. நாம் அனைவரும் கோவிட் -19 தொற்ரினால் தொடர்ந்து பாதிக்கப்படுவோம். இந்த தொற்றுநோய்க்கு கூட்டு வலிமையும் ஒற்றுமையும் தேவை என்று முஹிடின் கூறினார்.

இதில், NAM பணிக்குழுவை நிறுவுவதில் மலேசியா கை உயர்த்துகிறது. இது அடிப்படை மருத்துவ தேவைகளுக்கான பொதுவான தரவுத்தளத்தை உருவாக்குவதோடு, இயக்கத்தின் உறுப்பு நாடுகளின் சமூக மனிதாபிமான தேவைகளையும் அடையாளம் காண உதவும்.

இந்த ஆன்லைன் மாநாட்டின் மூலம் பலதரப்புகளை மேம்டுத்துவதற்கான அஜர்பைஜானின் முயற்சியை மலேசியா வரவேற்கிறது என்று அவர் முஹிடின் கூறினார்.

NAM கட்டமைப்பில் 120 நாடுகள் இருக்கின்றன. 17 மாநிலங்களும் 10 உலகளாவிய அமைப்புகளும் பார்வையாளர்களாக அங்கம் வகிக்கின்றன . ஒட்டுமொத்தமாக, இந்த இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 55 சதவீதத்தைத்தைக் கொண்டிருக்கிறது.

கோவிட் -19 அணிசேரா நாடுகளாக அடையாளம் காட்டி நிரூபித்திருந்தால், இந்த தொற்றுநோய் பரவுதலை தொடக்கத்திலேயே முறியடித்திருக்கலாம்.

இக்கொடூர கொரோனா தொற்றைக் கையாள்வதில் பெரிய நாடுகளை விட, சில சிறிய நாடுகள் வலுவானவையாக செயல்படுகின்றன. ஆனால், இப்படிச் சொல்வதால் சிறந்தவை என்று சொல்வதாகாது என்றார் அவர்.

மலேசியாவின் முயற்சிகள் குறித்து, கோவிட் -19 தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் ஆறு படிகள் கொண்ட திட்டத்தை வகுத்துள்ளது . கோவிட் -19 தொற்றின் அழிவுகளிலிருந்து மலேசியா வலுவாக வெளிப்படுவதை உறுதி செய்வதாகவும் முஹிடின் கூறினார்.

முதலில், தொற்றுநோயின் தீவிரத்தை உடைத்து, நாட்டு மக்களை அதனின்று காப்பாற்ற, மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) பிறப்பித்தது. இந்த நிபந்தனை மார்ச் 18 இல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, நேர்மறையான தாக்கங்கள் காணப்பட்டன. தினசரி குறைந்த புதிய வழக்குகளே பதிவு செய்யப்பட்டன. மீட்பு வீதமும், குறைந்த இறப்பு விகிதமும் 1.7 விழுக்காடாக மட்டுமே இருந்தன.

இரண்டாவதாக, பொருளாதாரத்தின் பின்னடைவை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார் அவர்.

பொருளாதாரத் துறைகள் பெரும்பாலானவை மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், நெருக்கமான மனிதத் தொடர்பு , பொதுக்கூட்டங்கள் சம்பந்தப்பட்டவை இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறப்பதைக் கொண்டு மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி முழுமையாக அகற்றப்படுவதாக தவறாகக் கருதக்கூடாது. கோவிட் -19 தொற்றை எதிர்கொள்வதில் ஒரு கட்டமைப்பான பொருளாதாரச் சீர்திருத்தமாகும் .

நிபந்தனையுடனான மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையினால் நம் மக்களின் வலிமை எதிர்ப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும், நமது நாடு இயல்பு நிலைக்கு ஒத்ததாக மாற்றுவதற்கு நாம் எவ்வளவோ முயற்சிகள் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிலை இயல்பாகத் தொடர வேண்டும், ஆனால், சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளையும், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியையும் பெற உலகளவில் நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே அதை அடைய முடியும் என்று பமுஹிடின் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here