போவோமா ஊர்கோலம்

கோலாலம்பூர், மே 5 –
நாட்டின் புதிய நிபந்தனைச் சுற்றில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அயராத முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து, ஐந்தாவது சுற்று, மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை மாற்றுச்சிந்தனையில் மிகுந்த விதி தளர்வுகளைக்கொண்டிருக்கிறது.

மலேசியர்களுக்கு, தளர்வான விதிகளைக் கொண்ட ஒரு புதிய உலகத்தில் அடியெடுத்து வைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதை மக்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்.

ஐசி.எம்.சி.ஓ எனும் (மே 4 முதல் 12 வரை) புதிய நிபந்தனைகளுக்கான விதிமுறைகளை நான்காவது சுற்றின் (ஏப்ரல் 29 முதல் மே 3 வரை) விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது மாற்றங்களின் வேறுபாடு வெளிப்படையாகவே தெரியும்.

1. புதிய விதிமுறைகளின் என்பது என்ன?
இந்த புதிய விதிமுறைகளில் இது ஐந்தாம் சுற்று. மாற்றங்களுடன் கூடிய ஐந்தாவது சுற்று ஒழுங்குமுறை என்பதைக் காட்டுகிறது, சுகாதார அமைச்சர் மூலமாக அரசாங்கம் முன்பு இதுபோன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. சூழலுக்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. ஒவ்வொரு முறையும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டன. அதில், இப்போது ஐந்தாம் முறை அனுசரிக்கப்படுகிறது.

2. புதிய விதிமுறைகள் எப்போது ?
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணைக்கான புதிய விதிமுறைகள் மே 3 அன்று பிரகடனம் செய்யப்பட்டன, மே 4 முதல் மே 12 வரை நடப்பில் கடைப்பிடிக்கப்படத்தொடங்கியது..

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணைக்கான பழைய விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், நிபந்தனை நான்குடன் ஒப்பிடுகைகையில் புதிய நடமாட்ட கூடல் இடைவெளித் தளர்வுகள் மக்களை இயல்பாக நடமாட வைத்திருப்பதை உணரமுடியும். புதியதில் பல இறுக்கங்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன என்பதைக் கண்டறியலாம்.

3. இனி 10 கி.மீ பயணத் தடை இல்லை. என்பதால் மக்கள் அச்சம் கொளவதைத் தவிர்க்கும் படி நினைவுறுத்தப்படுகின்றனர். சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here