அனைத்து ஆற்றலையும் பயன்படுத்த உத்தரவு

ஜாக்கர்த்தா,மே.6 –

கொரோனா தொற்றின் வளைவு மே மாதத்தில் குறைந்து, ஜூலை மாதத்திற்குள் குறைந்த எண்ணிக்கையை எட்டுவதற்குத் தேவையான எந்த வழியையும் பயன்படுத்த வேண்டும என்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ புதன்கிழமை தனது அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்,
ஆற்றல் முழுவதையும் செலுத்த வேண்டும் என்றும், கோவிட் -19 தொற்று, அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று விடோடோ ஊடகங்கள் ஒளிபரப்பிய அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், முதல் காலாண்டு தரவுகளின் அடிப்படையில், பொருளாதார பாதிப்பைச் சந்தித்த துறைகள் வீழ்ந்துவிடாமல் இருக்க முழு மூச்சுடன் ஆற்றலைப் பயன்படுத்துமாறு அவர் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here