சுத்திகரிப்புக்கு ஆள்பலம் அதிகரிப்பு

மிரி:
மனிதவளத்தைப் பயன்படுத்தி சரவாக் முழுவதும் பொது சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை (மே 6) நிலவரப்படி, மத்திய மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்களிலிருந்து சுமார் 6,733 பேர் துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்த எண்ணிக்கை சுமார் 5,000 ஆக இருந்தது.

3,612 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதாக சரவாக் தீயணைப்பு மீட்புத் துறை தனது சமீபத்திய அறிக்கைகளில் இதனைத் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள மனிதவளம் சுகாதார அமைச்சகம், சிவில் பாதுகாப்பு பிரிவு, ரேலா, ராணுவம், போலீஸ், மாவட்ட அலுவலகங்கள் , தன்னார்வ குழுக்களிடமிருந்து சுத்திகரிப்பு நடைமுறைகளை கையாள பயிற்சி பெற்றவையாகும்.
இதுவரை குறைந்தது 451 சுற்று சுத்திகரிப்பு பதிவுகள் முடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் , பள்ளி விடுதிகளில் இருந்து மாணவர்களைத் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல பயன்படும் பேருந்துகள், வேன்கள் போன்ற பொது போக்குவரத்தை சுத்தப்படுத்தவும் இந்த துப்புரவுத் துறைகள் சிறப்பு கவனம் செலுத்துகின்றன.

கடந்த வாரம் இறுதியில் இந்த நடவடிக்கை தொடங்கியதிலிருந்து சுமார் 3,000 மாணவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர், கூச்சிங்கிலிருந்து மிரிக்கு வருபவர்கள் சுமார் 1,000 கி.மீ பயணம் செய்யவேண்டும்.

இந்த சுத்திகரிப்பு மாணவர்களைக் கொண்டு செல்லும் பேருந்துகள், வேன்கள் மட்டுமல்லாமல் அவர்களின் தனிப்பட்ட சாமான்கள், அவர்கள் கூடியிருக்கும் சபை அரங்குகள், அனைத்து போக்குவரத்து புள்ளிகளையும் கிருமி நீக்கம் செய்வதில் அடங்கியிருந்தன..

நடவடிக்கைக் குழுக்கள் பொதுச்சந்தைகள், கட்டடடங்கள், அலுவலகங்கள் ,வணிக வளாகங்கள் வழிபாட்டுத் தலங்களையும் சுத்தப்படுத்துகின்றனர். சரவாக் மாநிலம் கோவிட் -19 தொற்றுக்கு எதிராக போராடுகிறது, மாநிலத்தில் இதுவரை 17 இறப்புகள் , சுமார் 550 நேர்மறையாக இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here