பள்ளத்தில் விழுந்த நாய் மீட்பு

ஜார்ஜ் டவுன்,மே.6-
பள்ளத்தாக்கில் விழுந்த நாய் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

பாகன் ஜெர்மல் தீயணைப்பு , மீட்பு நடவடிக்கை அதிகாரி ஹாரிஸ் ஹக்கிமி அபு ஹசான் கூறுகையில், இந்த நிலையம் பிற்பகல் 2.32 மணிக்கு பொதுமக்களிடமிருந்து ஒர் அழைப்பைப் பெற்றது. அழைப்பபெற்ற 10 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்தை தீயணைப்பு வாகனம் அவ்விடத்தை அடைந்தது.

பள்ளத்தில் விழுந்த நாய் சுமார் 100 அடி கீழே சரிவிலிருந்து மீள முடியாமல் தவித்ததைக் கண்டனர்.

கீழே இறங்கி பாதுகாப்பாகா நாய் மேலே கொண்டு வரப்பட்டது. ஒரு கப்பி முறையைப், பயன்படுத்தி நாயை மேலே கொண்டுவந்ததாக தீயணைப்புபிரிவின் அதிகாரி ஹாரிஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மீட்புப் பணியில், பாகன் ஜெர்மல் நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர். இந்நடவடிக்கைக்கு மவுண்ட் எர்ஸ்கின் தன்னார்வ தீயணைப்பு வீரர்களும் உதவினர்.

அவர் மேலும் கூறுகையில், மலைப்பகுதி என்பதால் வழுக்கல் நிறைந்ததாக இருக்கும். மேலும் ஆபத்தானவையும் கூட, என்றாலும் நாயை மீட்பதற்கு சுமார் இரண்டரை மணி நேரம் எடுத்ததாக அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here