குருவித்தலையில் பனங்காய்!

கோலாலம்பூர், மே , 6-
ஓர் இழுபறி பிரச்சின உருவாகும்போது மூன்றாம் தரப்பு சமரசம் செய்வது என்பது வழக்காமானது. அதேவேளை பொறுதாரியாக இருக்கும் ஒரு பிரிவி தர்ர்க வாதத்தை பொதுநிலை நோக்கோடு பார்ப்பவர்களும் நியாயத்திற்காகக் குரல் கொடுப்பதும் சமநிலையாகவே கருதப்படுகிறது.

அரசு, அல்லது சுகாதாரத்துறையின் செய்தியால் நிறுவனங்கள் சில பதறுவதாகவே சூழல் அமைந்திருக்கிறது. குறிப்பாக அந்நியத்தொழிலாளர்கள் தொடர்பில் கோவிட் -19 தொற்றுக்கான பரிசோதனைக் கட்டணத்தை அந்நியர்களை வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனங்களே ஏற்கவேண்டும் என்ற செய்தியால் பல குத்தகை நிறுவனங்கள் கதி கலங்கிப்போய் இருக்கின்றன.

சோதனை மேல் சோதனை என்பதுபோல இது அமைந்திருக்கிறதென்று மலேசிய தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் டத்தோ சம்சுடின் பர்டான் தெரிவித்திருக்கிறார். குருவித்தலையில் பனங்காய் வைத்தது பொல் குத்தைகையாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.

அந்நியத் தொழிலாலளர்களை தொழிற்துறைக்காக இறக்குமதி செய்தது அரசாங்கம். அவர்கள் இங்கு வந்து வேலையில் இணையும்வரை ஆரொக்கியம், சுகாதாரப் பிரச்சினகள் எழவில்லை. பெரும்பானமையான அந்நியத்தொழிலாளர்கள் மருத்துவ சோதனை செய்துகொண்டுதான் தொழிலில் இணைந்தார்கள். நோயுள்ளவர்கள் திருப்பிவிடப்பட்டனர் என்பதும் செய்தி.

அந்நியர்களாக வந்த தொழிலாளர்களுக்கு அப்போது கோரோனா-19 தொற்று இல்லை. கொரோனா தொற்று அண்மைய குறுக்கீடாகும். இதில் அந்நியத்தொழிலாளர்கள் மீது ஐயம் எழுமானால், அல்லது அவர்களுக்குத்தொற்று இருக்குமானால் அதற்கான பொறுப்பை சுதாதாரத்துறையே ஏற்க வேண்டும் என்பதுதான் பொது விதியாக இருக்கிறதுதிதைத்தான் பலர் சமநோக்கோடு பார்க்கிறார்கள்.

கொரோனா-19 தொற்று அந்நியர்களை மட்டுமே குறிவைத்த நோய் அல்ல. நாட்டில் அனைவரையும் ஒட்டுமொத்தமாய் குறிவத்திருப்பதால் இந்நோய் பொதுக்கணக்கில் வரவு வைக்கப்படவேண்டிய ஒன்றாகும். இதைத்தான் அவர் வலியுறுத்துகிறார்.

அந்நியத்தொழிலாளர்களுக்கு இந்நோய் இருக்குமானால், அதற்காக குத்தகை அல்லது வர்த்தக நிறுவனங்கள் பலிகடா ஆவது முறையானதல்ல என்கிறார் டத்தோ சம்சுடின் பர்டான்.

அனைத்து அந்நியத்தொழிலாளர்களும் பரிசொதனைக்கு உட்பட வேண்டும் என்பது கட்டாயம். அரசாங்கத்தின் நோக்கு சரியானது என்கிறார் மலேசிய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் டான்ஶ்ரீ சோ தியன் லாய்.

சோதனைக்கான பொறுப்பை சொக்சோ ஏற்கவேண்டும் என்று கூறப்படுவதிலும் சிக்கல் இருக்கிறது. பல தொழிலாளர்கள் சொக்சோ உறுப்பினர்களாக இல்லை. அவர்களின் கதி என்ன? இன்னும் சிலர் குடும்பமாகவும் இருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினர் தொற்றால் பாதிக்கப்படால் இருக்க, சோதனைக்கு உட்பட எந்தவகையில் சொக்சோ பயன்படும்? இதற்கெல்லாம் ஒரே வழி, நோய்த்தன்மையை உறுதிப்படுத்த சொக்சோ அல்லது சுகாதாரத்துறை பொது நிலையாகச் செயல்படவேண்டும் என்பதைத்தான் பல நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இதில் மற்ற செலவினங்கள் ஏற்படுமானால் அதற்கான செலவை நிறுவனங்களே ஏற்க வழி செய்யலாம் என்றும் கருத்து கூறப்பட்டிருக்கிறது. இதற்கான சமன்நிலை ஆய்வுகள் முக்கியமானதாக அமைய வேண்டும். முதல்தேவை மருத்துவமாக இருக்க வேண்டும்.

போதுமான வருமானம் இல்லாமல் பலர் வேலையிழப்புக்கும் ஆளாகும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த அபாயகரச் சூழலில் வலுவான பாரத்தை சாதாரன நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள் சுமக்கவே முடியாது.

சிறு , நடுத்தர நிறுவனங்கள் மூச்சு விட இன்னும் காலம் பிடிக்கும். அதுவரை அரசாங்கமே. அனைத்து சுகாதாரப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். இதில் அசட்டை என்றால நிபந்தனையுடனான மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையில் சறுக்கல் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here