நீதிக்கு ஓய்வெதற்கு?

இப்போது பலரின் பார்வை சிறையின் பக்கம் திரும்பியிருக்கிறது. சிறையின் நிலையென்னவாக இருக்கும் என்ற சிந்தனைக்குப் பலர் வந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் சட்ட மீறல்களுக்கு ஆளானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து ஜாக்கர்த்தா வரை அதிகமானோர் சிறைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களின் சுகாதாரம் மோசமடைந்திருக்கிறது. மோசமடையக் காரணம் குற்றவாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதுதான். நடமாடும் நீதிமன்றம் இருந்தால் இதற்குத் தீர்வுகண்டுவிடலாம்.

மக்களின் தொற்று எண்ணிக்கை கூடியும் குறைந்தும் வருகிறது. அதனால் குற்றச்செயல்களும் வஞ்சனை இன்றி அதிகரித்திருக்கின்றன. அதனால் கைதாவோர் எண்ணிக்கையும் கூடி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையால் பின்பற்ற முடியாமல் போகும்நிலை உருவாகிவிடக்கூடாது என்பதில் மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது.

பிற நாடுகளில் நிறைந்து வழியும் கைதிகள் எண்ணிக்கையால் பல சுகாதாரக் கேடுகள் அதிகரித்திருக்கின்றன. அதனால், இறப்புகலும் பிற நோய்த்தொற்றுகளும் ஏற்பட்டிருக்கின்றன. மலேசியா இவ்விவகாரங்களில் அதிக சிரத்தைக்காட்டி வருவதாக மலேசிய சிறை வாரிய பேச்சாளர் கூறியிருப்பது பொருட்படுத்தும் செய்தியாகும்.

மலேசிய கைதிகளிடம் நேர்மறைத்தன்மை இல்லை என்பதை அவரின் செய்தி உறுதிப்படுத்தியிருக்கிறது. சிறைப்பட்டிருக்கும் கைதிகள் 72 ஆயிரம் பேர்களிடம் நோய்த்தொற்று அறிகுறி இல்லை என்கிறார் அவர். சிறை வார்டன்களை முழுமையான சோதனைக்கும் உட்படுத்தியிருப்பதில் நேர்மறை இல்லை என்றும் தெரிகிறது.

முழுமையான தூய்மைப்பணிகளும், சிறையறையில் இருப்பவர்களைக் கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறை வாரிய இயக்குநர் டத்தோஶ்ரீ ஸுல்கிப்ளி ஓமார்  கூறுகிறார். கூடுதலாக உள்ளவர்களுக்கு தனிப்பிரிவுகளும் அமைக்கப்பட்டிருகின்றன.

அதே வேளை சந்தேகத்திற்குரியவர்களைத் தனிமைப்படுத்தும் பகுதிகளும் இருக்கின்றன என்கிறார் அவர்.

அமெரிக்காவில் சிறையறைப் பங்காளிகளிடமிருந்தே  தொற்று எண்ணிக்கை அதிகமாவதாக கூறப்பட்டிருக்கிறது. அந்த நிலைமைக்கு உட்படாமல் போதிய பாதுகாப்பு இங்கே இருக்கிறது என்பது நம்பிக்கையான உண்மையாகும்.

இனி, கோவிட் 19 எண்ணிக்கை உயர்வினால் சட்ட மீறல்கள் நிகழ்ந்தால் நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்படுவது பற்றியும் யோசிக்கலாமே. நீதிக்கு சனி ஞாயிறு என்ற பேதமில்லை. தேவையுமில்லை.

குற்றவாளிகளைத் தேடி நீத்மன்றம் வந்தாலும் தப்பில்லை. கூடம் அதிகமாக இருந்தால் வட்டாரப் பொதுமண்டபங்கள் சிறைக்கூடமாக மாறட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here