திருந்து,  இல்லையேல் வருந்து!

அரசாங்கம் ஒரு திட்டத்தை வலியுறுத்தும் போதும் அத்திட்டத்தை வலியுறுத்தும்போதும் மக்கள் அத்திட்டத்திற்கு இணங்க வேண்டும் என்பது பொதுவிதி. திட்டங்கள் மக்களுக்கானது. தனி மனிதருக்கானது அல்ல. அதனால், திட்ட அறிமுகத்தை மக்கள் நடைமுறைக்கு மாற்றிக்கொள்ளவேன்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

கொரோனா எனும் தொற்றில் மக்கள் பாதிக்கப்படும்போது அதிலிருந்து மக்களை மீட்கும் திட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றன. இது அரசாங்கத்தின் கடமை. நடைமுறையும் இதுதான். இது, அலட்சியம் செய்யப்படும்போது ஆணையாக உருமாறுகிறது.

ஆணை என்பது சர்க்கஸ் காட்டும் ஆனையல்ல. ஆணை மக்களுக்கானது அதைக் கடைப்பிடிக்காமல்விட்டால் அதனால் பாதிப்புகள் பெருகிக்கொண்டே போகும். இதை சர்க்கஸ் ஆனையோடு ஒப்பிடக்கூடாது. அதாவது பெரிதாக வரும். பத்து நிமிடம் கண்காட்சிக்குப் பின் போய்விடும் என்பதாக இருக்கக்கூடாது.

நிபந்தனையுடனான மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணைக்கு மரியாதை வழங்கும் மக்கள், அதை மீறுவதால் துன்பம் அதிகரிக்கும். நடைமுறையில் இப்படித்தான ஆகிவருகிறது.

திருத்துவது என்பதில் தவறு இல்லை. இப்போது, திருந்துவது எப்போது என்பதுதான் கவலைக்கிடமாய் மாறிவருகிறது. பழைய குருடி கதவைத்திறவடி என்பதுபோல் நிலைமை இன்னும் சீர்படவில்லை என்கிறார் மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சரி யாக்கோப்.

மக்கள் எதையும் பொருட்படுத்துவதில்லை. பின்விளைவுகள் பற்றிய சுகாதாரச் சிந்தனையில்லை. பேரங்காடிகளிலும் சந்தைகளிலும் விதிகள் மீறப்படுகின்றன. வேலையிடங்களில் முறைகள் பின்பற்றப்படுவதில்லை.

மக்கள் தங்கள் நோன்புப்பெருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்குப் போகமுடியவில்லை என்பதில் அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது. ஆதங்கம் இருக்கிறது. இதற்குக் காரணம் இருக்கிறது. ஹரிராயாவிற்குச் சென்று வந்தபின் நிலைமை மோசமாகவும் மாறலாம்.

மருத்துவ முன்னணியாளார்களையும் அவர்களின் தியாகத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். கொரோனாவை ஒழிப்பதில் மலேசியர்கள் ஒரு முன்னுதாரணமாக இருப்பதை இந்த உலகத்திற்குக்  காட்ட வேண்டும் என்கிறார் சுகாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா.

அதற்கு ஒரே வழி திட்டங்களைக் கடைப்பிடிப்பதுதான். மீண்டும்  மார்ச் 18 நிலைமைக்குத் திரும்பும் சாத்தியம் ஏற்படாமல் இருப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here