உணவகங்களில் உணவருந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

ஜோர்ஜ்ட்டாவுன், மே 15 – கோவிட் -19 தடுப்பத்ற்கான நடவடிக்கைகளுடன் அடுத்த திங்கட்கிழமை தொடங்கி, பினாங்கு மாநிலத்தில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள்.

கடுமையான சமூக தூரத்தை அமல்படுத்த வேண்டும், அதே சமயத்தில் உணவகங்களில் உணவருந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறினார்.

மே 4 அன்று மத்திய அரசு அமல்படுத்திய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் தளர்வான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் பினாங்கில் உள்ள உணவகங்கள் இரவில் மூடப்பட்டுள்ளன.

மாநில அரசு உருவாக்கிய தொடர்புத் தடமறிதல் முறை இப்போது உணவக உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சோவ் கூறினார். PGCare எனப்படும் அந்த அமைப்பு உணவக உரிமையாளர்கள் உணவகங்களில் உணவருந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களையும் பதிவு செய்ய முடியும் என சோவ் கோன் யோவ் கூறினார்.

இந்த அமைப்பு வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை மட்டுமே பதிவு செய்யும், அவை மாநில அரசுக்கு கிடைக்காது.

தேவை ஏற்பட்டால் தகவல் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்படும். தகவல்கள் 30 நாட்களுக்கு வைக்கப்படும், அதைத் தொடர்ந்து அது தானாகவே நீக்கப்படும் என சோவ் கோன் யோவ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here