உற்பத்திச் சரிவு உயரும் வழியென்ன?

மலேசியத் தொழில்கள் முடங்கிக் கிடந்ததில் சோர்வடைந்திருக்கின்றன என்ற அதிருப்தியான செய்தியும் கூறப்பட்டிருக்கிறது. இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. பொதுவாகவே அப்படித்தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

கொரோனா ஏன் வந்தது? எதற்காக வந்தது? யாருக்காக வந்தது? அதனால் என்ன நடந்தது என்றெல்லாம் யோசிக்கும் காலம் கடந்துவிட்டது. அதற்கான வேலைகளை சுகாதார அமைச்சு தீவிரமாகக் கவனித்து வருகிறது.. சுகாதார முன்னணியாளர்கள் அதற்காக தியாகம் செய்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்குத் தேவை வருமானம். வருமானம் தருகின்ற நிறுவனம், நிறுவனத்தை நடத்துகின்ற நிதியாண்மைத்துறை. இவர்களின் நலன் பற்றியதாகத்தான் இருக்கிறது. இருக்கவும் வேண்டும்.

நிறுவனங்கள் நலமாக இருந்தால்தான் தொழிற்துறை சிறப்பாக இயங்க முடியும். தொழில்துறை சிறப்பாக இருந்தால்தான் தொழிலாளர்கள் சிறப்பாக இருக்க முடியும். தொழிலாளர்கள் சிறப்பாக இருந்தால்தான் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்று கூறமுடியும். பொருளாதாரம் செழிப்பாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கமுடியும்.

நாடு வளமாக இருந்தால் நாடுகின்றவர்களுக்கு நன்மையாக இருக்கும். முதலில் தொழில், தொழிலாளர்களின் நலன் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் தொழிர்துறை மேம்பாடு தெரியும்.

கொரோனா பாதிப்புக்கு முன் நம்நாட்டில் ஒரு பிரச்சினை இருந்தது. அது. தொழிலாளர்களின் திறன் குறித்ததாகவும் இருந்தது. அதனால்தான் தொழில்துறை தேர்ச்சிக்கு அதிகப் பயிற்சிகளை வழங்கினார்கள். அப்படியிருந்தும் தொழிற்துறையில் அதிக முன்னேற்றம் காணப்படாமலேயே இருந்தது. அதனால் உலகளாவிய திறனில் நாம் எடுபடாமல் இருந்து வந்திருக்கிறோம்.

நாட்டின் இன்றைய நிலையை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று கொரொனாவுக்கு முன், மற்றொன்று கொரோனாவுக்குப் பின் என்பதாகப் பிரிக்கலாம். விளக்கத்திற்காக, கொ மு, கொ பி, என்றும் வைத்துக்கொள்ளலாம்.

கொ. மு காலத்தில் இருந்த நிலை இப்போது இல்லை. தொழிற்துறை கொடுமையான கொரோனாவில் முடங்கிக்கிடந்து மெல்ல தலைதூக்கியிருக்கிறது. எழுந்து நடப்பதற்கு இன்னும் சிரமப்படுக்கிறது. அதனால், வேலையிழப்பு, வருமானம் இழப்பு மிக அதிகமாகிவிட்டது.

கொ பி க்குப் பின்னால் மக்களின் மன உணர்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மனத்தளவில் பாதிப்பும் அதிகமாகியிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உண்மைதான்,

தொழிற்துறைக்குத் திரும்பியவர்கள் இன்னும் கொரோனா அச்சத்திலிருந்து மீளவில்லை என்பதை உற்பத்திக:ள் காட்டுகின்றன என்கிறது ஆய்வு. நிபந்தனையுடனான மக்கள் நடமாட்ட காலத்தில் இவை கண்டறியப்பட்டுள்ளன.

இதில், பல்கலைக்கழகத்திற்கும் அப்பாற்பட்ட கல்வியிருக்கிறது. புதியவற்றைக் கற்றுக்கொண்டவர்களாக மக்களும் தொழிற்துறைகளும் மாறியிருக்கின்றன. மலேசியர்கள் புதிய பரிணாமம் பெற்றிருக்கின்றனர். இதன் வலி அதிகம்.

இனி, சுழியத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. சுறுசுறுப்புக்கு மாற்றம் பெற புதிய வழிகளைக் கையாள வேண்டும். அப்போதுதன் உற்பத்தி பெருகும். பொருளாதாரம் மீட்சி பெறும்.

கொரோனாவுக்குப்பின் தொழில்துறை, முன்னணியாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here