2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நல்ல அதிபர் இருக்க வேண்டும்! இடையூறாக இருக்கிறார் டிரம்ப்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையூறு செய்வதாகவும், தலையிடுவதாகவும் சுட்டிக்காட்டி பிரபல மருத்துவ இதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் தலைசிறந்த மருத்துவ இதழான The Lancetயில் வெளியான செய்தியில், “அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு (CDC) இடையூறாகவே உள்ளார்.

அதிர்பர் டிரம்ப், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு ஆதரவாக இல்லாமல், அதன் பணிகளை குறைந்து தேவையற்ற ஆலோசகராக செயல்படுகிறார்.  மேலும், CDC-ன் பணிகளை குறைத்து மதிப்பிட்டு சீனாவில் ஒரு உளவுத்துறையை நிர்வகிக்க அவர் தவறவிட்டுவிட்டார். முன்னதாகவே CDC மருத்துவர், வைரஸ் குறித்து எச்சரித்தும் டிரம்ப் அதை மதிக்கவில்லை.

தொடர்ந்து கொரோனாவுக்கான பரிசோதனை முறைகளை சரி செய்யாததற்கு அவரது நிர்வாகமே குற்றவாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் ஒரு நல்ல அதிபர் இருக்க வேண்டும். அவர், மோசமான சுகாதாரம் மற்றும் பாகுபாடான அரசியலில் மக்களை வழிநடத்தக் கூடாது என்று அந்த செய்தியின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here