சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய கவலை ஒன்றிருக்கிறது.
இக்கட்டான காலத்திலும் நல்ல செய்தி ஒன்று காதில் விழுந்திருக்கிறது. சமய சார்ந்த வழிபாடுகள், பூசைகள் ஆகியவற்றுக்கான நேரம் கூடி வந்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. உள்ளபடியே இது நல்ல செய்திதான்.
இஸ்லாமியர்களுக்குத் தொழுகை நேரம் நிபந்தனையுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பச்சை மண்டலங்களில் இவை கடைப்பிடிக்கப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பான முறையில் தொழுகைகளை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்
மக்களுக்கான பாதுகாப்பையும் வழங்கவேண்டும். அதே சமயத்தில் சமய நெறிகளைக் கடைப்பிடிக்கும் வழி வகை செய்யவேண்டும். இரண்டையும் சரியான நெறியோடு வழிநடத்தவேண்டும் என்பதில் அரசு மிகக் கவனமுடன் செயல்படுகிறது.
சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய கவலை ஒன்றிருக்கிறது. அதுதான் ஹரி ராயா பெருநாள். இந்நாளின்போது மக்கள் செயல் முறை கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது சாத்தியமா என்பதுதான். குறிப்பாக மலாய்ச் சகோதரர்கள் செயல்பாட்டுமுறையை கடைப்பிடித்தால்தான் கொரோனா துயர் நெருங்காமல் பார்த்துக்கொள்ளமுடியும்.
இப்பெருநாள் காலத்தில் இது சாத்தியப்படவேண்டும் என்று அரசு ஆசைப்படுகிறது. அதேவேளை மிகக்கவனமாகவும் செயல் படுகிறது.
இந்த நிலையில், பிற சமூக சமய நெறிகளையும் புறக்கணித்துவிடமுடியாது என்ற கடப்பாடும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. நாட்டுமக்களின் நன்மையும் பொதுவானதாகக் கருதப்படுவதால் இந்த இக்கட்டான நேரத்திலும் பிற சமய வழிபாட்டுக்கும் வாய்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது.
ஆனாலும் இதிலும் சின்ன சிக்கல் இருக்கிறது. பிற சமயங்களின் ஒன்றுகூடல் செயல்பாட்டு முறையை கவனத்தில் கொள்வதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அது ஒழுங்காக இருக்கும்.
சமயத்திற்கென்று நெறிமுறைகள் இருந்தாலும் நாட்டின் இக்கட்டான நிலை கருதி நெறிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்பதை ஆலயங்கள் மறந்துவிடக்கூடாது.
அரசு அறிவிக்கக் காத்திருக்கும் நல்ல செய்திக்கு இடையூறு இல்லாமல் இருப்பதே சமய நெறிக்கு அழகாகும். இந்து சமய நெறி அழகானது. அதை அசிங்கப் படுத்துதல் அழகானது அல்ல.