கல்வியால் சிற்பிகள்

ஆசிரியர்களின் சேவை மகத்தான சேவை என்று சொல்லாதவர்கள் இல்லை. அசிரியர்கள் என்றாலே தனி மதிப்பு உண்டு.  அனைவர் மத்தியிலும் மரியாதை உருவெடுத்துவிடும். ஆசிரியர்கள் மேன்மக்கள் வரிசையில் மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள் என்பதல்ல பொருள் மூன்றாம் வரிசை என்பது கணக்கின்படி முதல் வரிசையில் இருக்கிறது என்பது ஞானப்பார்வையாகும்.

மாதா, பிதா என்பது முதல் இரண்டைக் குறித்தாலும் இவ்விருவரையும் தவிர்த்து, முதலில் நிற்பவர் குரு. இவரே ஆசிரியராக வருகின்றார். ஆசிரியரின் வேலை என்ன? மாணவனின் சந்தேகத்தைக் களைவது. சந்தேகத்தை ஆசு என்றும். களைபவரை இரியன் என்றும் கூறுவதால் அசிரிய ஆகியிருக்கிறார்.

அரசர் அரசியார் முதல் அத்துணை மக்களும் ஆசிரியர் இன்றி உயர்ந்தோர் இல்லை. சாதாரண மக்கள் முதல் உயர்ந்தோரெல்லாம் கல்வியால்தான் உயர்திருக்கிறார்கள்.

ஒரு கட்டடத்தை உயர எழுப்புதல் போல், கல்வி எனும் கட்டுமானத்தால் மாணவனை எழுப்புகின்ற ஆற்றல் அசிரியர்களுக்கு மட்டுமே உண்டு என்பதைப் பாராட்டும் முகத்தாண் நாட்டின் மாமன்னர் வாழ்த்து கூறியிருக்கிறார்.

ஆசிரியர்களால் நாடு செழிப்படைந்துவருகிறது. கல்வியால் மாணவர்கள் உயர்கிறார்கள் என்றால் ஆசிரியர்கள் இல்லாமல் அது நடவாது.

இக்காலக் கட்டத்தில் ஆசிரியர்களின் கல்விமுறை மாறியிருக்கிறது. ஓய்விலும் வீட்டிலிருந்தபடியே கல்விப்பணிசெய்யம் அசிரியர்களை ஆசிரியர் தினத்தில், சிற்பிகள் எனும் பொருள்பட வாழ்த்தியிருக்கிறார் நாட்டின் கல்வியமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி பின் முகமட் ஜிடின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here