புத்ராஜெயா, மே 19 – வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர் 14 நாள் கட்டாய சுய தனிமைப்படுத்தலை மீறிய பல மாணவர்கள் கோவிட் -19 தொற்றுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பல நோய்களின் பிரச்சினை கொண்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்தார்.
இது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைகிறது. சுய தனிமை படுத்தலை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது அவர்களின் பாதுகாப்பினை மட்டுமின்றி மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.
மலேசியாவில் மாநில எல்லைகளைத் தாண்டியவர்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தது, அதே நேரத்தில் சபா அல்லது சரவாக்கிற்கு திரும்பிச் செல்வோர் நோய் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.