காணக் கிடைக்காத காட்சியாக இன்று ஈப்போவில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த ஆலங்கட்டி மழையை வியப்பாக பார்க்கும் மக்கள் ஒரு புறம் இருந்தாலும் பலர் இதை மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர்.
இன்று மாலை 5.45 மணியளவில் ஈப்போவின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கோப்பேங் தொடங்கி தம்பூன் வரையில் மாலை 4 மணி வரையில் கடுமையான மேக மூட்டம் நிலவியது.
கொரொனா காலம் என்பதால் மக்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடு தளர்வு காரணமாக பொருட்கள் வாங்க வெளியே சென்றிருந்த மக்கள் கடுமையான மேக மூட்டத்தை கண்டு உடனடியாக வீடு திரும்பினர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு கடுமையான மழை பெய்யத் தொடங்கியது. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த மக்கள் ஆலங்கட்டி மழை பெய்து கொண்டிருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தனர்.