ஈப்போவில் இன்று பெய்த கனத்த மழையால் பல்வேறு இடங்களில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
திருப்பதி விலாஸ் உணவகம் முன் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது பலகைகள் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. 3 கார்கள் இதில் பாதிக்கப்பட்டன.
அதோடு, ஜாலான் ராஜா முஸா அசிஸில் அமைந்துள்ள செயின்.ஜோன் ஆம்புலன்ஸ் தலைமையகத்தின் முன் பெரிய மரம் விழுந்ததில் சாலை நெரிசல் ஏற்பட்டது. அதோடு ஈப்போவில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது.