சட்டவிரோத இணைய சூதாட்டம் 9 பேர் கைது

கோலாலம்பூர், மே 20-

சட்டவிரோதமான முறையில் இணைய சூதாட்ட மையத்தை வழி நடத்தி வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இங்குள்ள மோன்ட் கியாரா கட்டட அலுவலகம் ஒன்றில், கடந்த ஓராண்டு காலமாக இச்செயலில் ஈடுப்பட்டு வந்த கும்பலை கோலாலம்பூர் குண்டர் கும்பல், சட்டவிரோத சூதாட்ட தடுப்பு பிரிவினர் சுற்றி வலைத்து பிடித்தனர். இந்த நடவடிக்கையில் 5 சீனா ஆடவர்களும் 4 சீன பெண்களும் கைது செய்யப்பட்டனர். அதோடு இணையத்தின் வழி சூதாட்டததை வழி நடத்த பயன்படுத்தப்பட்ட கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரொக்கப்பணமாக கிட்டத்தட்ட 30,000 ஆயிரம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன. சீனா நாட்டின் சூதாட்ட வழிமுறைகளை இந்நாட்டில் சமூக வலைததளங்கள் மூலம் இந்த கும்பல் பரப்பி பணம் சம்பாதித்து வருகிறது.

6 ஆயிரம் வெள்ளிக்கு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வெள்ளி வரை இக்கும்பல் சம்பாதித்து வருகிறது. இதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு 3 முதல் 4 ஆயிரம் வெள்ளி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாசிம் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

சட்டத்திற்கு புறம்பான இச்செயலில் பொதுமக்கள் ஈடுப்பட கூடாது. இது மலேசிய சட்டவிதிகளுக்கு எதிரானது. இதில் இணைந்து பணத்தை விரையம் செய்ய வேண்டாம். இதில் ஈடுபடுபவர்கள் மீது போலிஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இணைய சூதாட்டம் தொடர்பில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் தகவல் கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here