திரைப்படம், நாடகம், விளம்பர படப்பிடிப்புகள் அனைத்தும் ராயா பெருநாளுக்குப் பிறகு தொடங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருந்தாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் நிபந்தனைகளை பின்பற்றியே அனைவரும் செயல்பட வேண்டும் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் அறிவுறுத்தினார்.
திரைப்படம், நாடகம், விளம்பர படப்பிடிப்புகள் என எதுவாக இருந்தாலும் தொடுதல் போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது. சமூக இடைவெளிக்கு உட்பட்ட காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
இன்று நடைபெற்ற அமைச்சர்களுக்கிடையிலான சிறப்பு சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராயாவுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை செய்த பின்னர் ஜூன் மாத இறுதிலேயே படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தகவல் பல்லூடக அமைச்சு தெரிவித்தாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் கூறினார்.