ரமலான் காலக் கட்டத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சிக்கும் வாகனமோட்டிகளை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை தடுப்பு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்பில் தஞ்சோங் மாலிம் டோல் சாவடி வழி பேரா, பினாங்கு போன்ற மாநிலங்களுக்கு செல்ல முயன்ற 35 கார்களை திருப்பி அனுப்பியதாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ அர்ஜூனாய்டி தெரிவித்தார்.
பகாங், குவாந்தான் போன்ற மாநிலங்களுக்குச் செல்ல முயற்சிக்கும் வாகனமோட்டிகள் கோம்பாக் டோல் சாவடியில் திருப்பி அனுபப்படுவதாகவும் அவர் கூறினார்.
முறையான காரணம், போலீஸாரின் அனுமதி கடிதம் இருப்பவர்கள் மட்டும் மாநிலம் கடந்து செல்லலாம். இவை இல்லாதவர்கள் திருப்பி அனுபப்படும் வேளையில் நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்று டத்தோ அர்ஜூனாய்டி கேட்டு கொண்டார்.