பச்சை மண்டலத்தில் உள்ள 174 வழிப்பாட்டுத் தளங்கள் ஜூன் 10 திறப்பு

பச்சை மண்டலம் என குறிப்பிடக் கூடிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதோரின் வழிப்பாட்டுத் தளங்கள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

அவ்வாலயங்கள் திறக்கப்பட்டவுடன் வழிப்பாட்டிற்கு செல்லும் மக்கள் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக 30 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

இன்று நடைபெற்ற அமைச்சர்களுக்கிடையிலான் சிறப்பு சந்திப்பில், இஸ்லாம் அல்லாதோரின் வழிப்பாட்டுத் தளங்களை திறப்பது குறித்து ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சட்டிக் பேசினார். ஜூன் 10ஆம் தேதி அவ்வாலயங்களை திறக்க அக்கூட்டம் அனுமதி வழங்கியதாக அவர் கூறினார்.

வழிப்பாட்டுத் தளங்கள் திறக்கப்பட்ட பின்னர் 70 வயதுடையவர்களும் 12 வயதுடையவர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாது. முக கவசம் அணிதல், நுழைவாசலில் செனிடைஸர் கொடுப்பது போன்ற அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் பின் பற்ற வேண்டும். அந்நிய நாட்டினர் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here