போலி முகநூல்களால் முடியும் வாழ்க்கை

உண்மை மட்டுமே சத்தியமானது, போலிகள் என்பது அசாத்தியமானது.

சமகால வாழ்வியலுக்கு மத்தியிலும் நமது தலையில் கொட்டு விட்டு மேற்கண்டவாறு சொல்கிறது நவீன ஊடகம்.

முகநூல் (Facebook), டிக் டாக்(Tik TOK) போன்றவை நல்லதைச் செய்ய வரும் அதன் இயல்பிலிருந்து மாறவில்லை, அதனை பயன்படுத்தும் மனிதர்கள்தாம் தங்கள் விருப்பம் போல மாற்றிச் செயல்பட்டு அதன் தன்மையையும் மாற்றி வருகிறார்கள்.

எனினும் சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னர்தான் தனிமனித சுதந்திரத்தின் எல்லைக்கோடு அகற்றப்பட்டு வரைமுறைகளும் தகர்த்தெறியப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது,

முகநூல் ஆரம்பித்த காலக்கட்டத்தில் நாம் அனைவரும் அதை வணிகத்திற்கும் தூரத்தில் இருக்கும் நண்பர்களிடம் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தோம். முகநூலின் அறிய பயனை அறியாத சிலர் அதனை  தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் சிறியவர்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

முகநூலில் நாம் பதிவிடும் புகைப்படம் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நமது தலைவிதியை மாற்றும் செயல்களில் வீணர்கள் ஈடுபடுகிறார்கள்.

இதன் காரணமாக பல குற்றச் செயல்களும் நேர்ந்துள்ளன,  முகநூல் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் அதில் நாம் தெரிவிக்கும் தகவல்களை வேறு யாரும் திருட முடியாது எனவும் அந்த நிறுவனம் நின்றிடாத அறிவிப்பைச் செய்து வருகிறது. இதனை பொய்யாக்கும் வகையில் பல சம்பவங்கள் சமகாலமாக அரங்கேறி வருகின்றன.

நிறைய சம்பவங்கள் போலி முகநூல்கள் மூலமாகவே நடந்து வருகின்றது. இதனால் நிறைய பேருடைய வாழ்க்கை அழிந்து போகிறது. பெண்கள் தங்கள் புகைப்படங்கள் அல்லது தங்களுடைய விவரங்களை பகிர்ந்து வருவதால்தான் நிறைய போலி முகநூல்கள் அதனை எடுத்து தங்களை வேடிக்கையாகவும் அவர்களின் சந்தோசத்திற்காகவும் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

யாரோ ஒருவருடைய பெயரில் அல்லது கற்பனைக்கு எட்டாத புனைப்பெயரில் ஒருவர் நமது இணைய ஊடக பதிவை கடுமையாக விமர்சிக்கலாம். அந்த நபர் நமது வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி வசிக்கும் எதிரியாகக் கட இருக்கலாம் என்பது நமக்கே தெரியாது.

இப்படித்தான் போகிறது நவீன உலகம், சொற்போர், வாட்போர், யானைப்போர், குதிரைப்போர், கப்பல் போர், விமானப் போர் எல்லாம் முடிந்து தற்போது விரைந்திருக்கும் பயோ வார் எனப்படும் உயிரியல் போர் போல!

முகநூல்களில் மட்டும் இல்லாமல் டிக் டோக் (tik tok) எனும் செயலிகளில் கூட இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளன. இதில் பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல, நம் கலாச்சாரமும்தான். நமது விவரங்களைப் பகிரும்போது எதையும் ஒரு தடவைக்கு பல தடவை  சிந்தித்துதான் பகிர வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகமாக கவனம் செலுத்தினால் மட்டுமே இதில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

சமூக ஊடகங்களின் வருகைக்கு முன்னர் நமது பாரம்பரியம் எப்படி வாழ்ந்தது? குடும்ப இலக்கணம் எப்படி வரையறுக்கப்பட்டிருந்தது? பந்த பாசங்களின் மதிப்பீடு எந்த அளவுக்கு இருந்தது? குடும்ப உறவுகளின் கலாச்சாரம் எந்த அளவுக்கான மதிப்பீட்டுடன் வரையறுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது குறித்தெல்லாம் நாம் சிந்தித்து அதனை இளைய தலைமுறைக்கும் போதிக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

போலிகளை தவிர்ப்போம்,,, முகநூல் போலி பயனீட்டாளர்களை தவிர்ப்போம். டிக் டாக் போலி ஆசாமிகளையும் ஓரங்கட்டுவோம், உண்மைக்கே நேசக்கரம் நீட்டுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here