பொறுப்பு பொறுப்பானது

இயல்புச் சூழலில் பெருநாள் கொண்டாடப்படவில்லை என்பதில் மிகுந்த வருத்தம் இருக்கிறது.  இது, மக்களின் மகிழ்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கம் அல்ல. நாட்டின் நிலைமை அறிந்து, அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்ட மக்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது என்கிறார் நாட்டின் தலைமை போலீஸ் அதிகாரியான டான்ஶ்ரீ அப்துல் ஹமீட் பாடோர்.

கோவிட் -19 அசாதாரணமாய் மக்களை மருட்டிக்  கொண்டிருக்கிறது. கணிசமான இறப்புகளையும் சத்தமில்லாமல் எடுத்துக்கொள்கிறது. மார்ச் மாதத்தில் கொரோனா அச்சம் தலை தூக்கியபோது அதன் பாதிப்பு பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. காலப்போக்கில் அதன் பாதிப்பில், சுகாதரத்துறையின் உழைப்பு சாதாரணமானதாக இல்லை. மிகக் கடுமையானதாகிவிட்டது

அவர்களுக்குப் பின்னணியாக இருந்த முன்னணி வீரர்களாக நீலநிற உடையாளர்களின் சேவையை மறப்பதற்கில்லை என்று பாராட்டுதல் தெரிவித்திருக்கிறார் அவர். உழைப்பென்று வரும்போது அதில் கடமை இருக்கும். அதை உணர்த்தும்  பொறுப்புள்ளவர்களாக போலீஸ்காரர்கள் செயல்படுக்கிறார்கள்.  இது, வெறும் கடமைக்கான் உழைப்பு அல்ல, கடமையின் உள்ளார்ந்த அர்த்தமாகும். போலீஸ்காரார்கள் நாட்டின் முன்னணி நாயகர்கள். இவர்கள் இல்லையென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் ?

பொய் புரட்டு, திருடு, கொலை, கொல்லை என நாட்டின் நிலை சீரழிந்துபோகும். இவற்றை எல்லாம் தடுத்து, நாட்டைக்காக்கும் ஹீரோக்களாக பவனி வருகின்றார்கள் போலீஸ்கரர்கள் என்பது மதிக்கப்படவேண்டும்.

இன்றையச் சூழலில், மக்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள் என்றால் நாட்டின் முன்னணி வீரர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் தொடர் சேவையாகும். அவர்களால்தான் இன்னும் பெருநாள் பேசப்படுக்கிறது. கட்டுப்பாடுகள், சோதனை என்பதெல்லாம் மக்களுக்கானது என்ற உழைப்பும்  தியாகமும் அதில் தெரிகிறது.

மவுனமாக மக்களைக் கொல்லும் கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் நீல நிற ஆடை ஹீரோக்கள் பெருநாளிலிருந்து விடு பட்டிருக்கிறார்கள். இவர்கள் உள்ளபடியே தியாகிகள் வரிசையில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு மக்கள்  சொல்லவேண்டிய வார்த்தை ஒன்று உண்டு. பார்க்குமிடமெல்லாம்  நன்றி சொன்னால் போதும். அதுதான் சிறந்த கைம்மாறு. மக்கள் செய்யவேண்டிய காரியங்கள் இருக்கின்றன. மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையைப் பின்பற்றுவதுதான் நாட்டின் நலனில் அனைவருக்கும் பங்குண்டு தலைமை போலீஸ் அதிகாரி இதைவ்உணர்த்துகிறார். பொறுப்பு யாருக்கோ அல்ல. நமக்கானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here