10 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டில் துப்புதுலங்கக் காரணமான சிறுவன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருட்டு சம்பவத்தில், திருடப்பட்ட பொருளை மிக சாமர்த்தியமாகக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளான் ஆறு வயது சிறுவன்.

விடுமுறை நாளில் விளையாட்டாக பொழுதைப் போக்க தெற்கு கரோலினா ஏரியில், காந்தத்தை வைத்து, தண்ணீருக்கு அடியில் ஏதேனும் உலோகப் பொருள்கள் இருக்கிறதா என்ற தேடலில் ஈடுபட்டிருந்தான் அந்த சிறுவன்.

அப்போது ஒரு கனமான பொருள் காந்தத் தூண்டிலில் சிக்கிக் கொண்டது. அதை மேலே இழுத்தெடுத்துப் பார்த்தபோது, அதில் பூட்டப்பட்ட இரும்புப் பெட்டி ஒன்று கிடைத்தது. உடனடியாக சிறுவனின் குடும்பத்தார் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த காவல்துறை, பெட்டியை உடைத்து அதில் விலை மதிப்புள்ள சில தங்க நகைகளை எடுத்தனர்.

அதே ஏரிப் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் அவை என்பதை காவல்துறையினர் கண்டறிந்து, அப்பெண்ணிடம் அவற்றை ஒப்படைத்தனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் காணாமல் போன பல்வேறு விலைமதிப்புமிக்க பொருள்களில் இதுவும் ஒன்று என்று கூறிய அப்பெண்மணி, தனது நகைகளைக் கண்டுபிடித்துக் கொடுத்த சிறுவன் அருகில் முழந்தாளிட்டு அமர்ந்து கட்டிப்பிடித்து கண்ணீருடன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here