இந்து ஆலயங்கள் தெய்வீகத்திற்குக் கட்டுப்பட்டவையாகும். இதன் தத்துவவிளக்கங்கள் மிகுந்த மரியாதைக்குரியவை என்பது உலகறிந்த உண்மை. அதலால்தான் தமிழறியாத நாடுகளிலும் இந்து ஆலயங்கள் இங்கிலாந்து நாட்டைவிட கூடுதலாக மதிக்கப்படுகின்றன. அமெரிகர்களாலும் போற்றப்படுகின்றன.
சில வேளைகளில் மறத்துப் போன மனிதர்களின் அடாவடித்தனத்தாலும், இந்து சமயத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் வதந்திகளைப் பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. வதந்திகள் கொரோனாவைவிட மோசமான தொற்று நோய். அதனால்தான் பல விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன. ஏற்பட்டுவிடுகின்றன.
வதந்திகள் ஒரு சமுதாயத்தின் சாபத்துக்குகும் ஆளாகிவிடுவதுபோல், பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுவதுண்டு. இந்த வதந்திவலைகள் இந்து ஆலயங்களையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு வைரலான அண்மைய திருமணப்படங்கள் உதாரணமாக இருக்கின்றன..
செர்டாங் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், அண்மையில் திருமணம் நடந்ததாகவும் அதில் நூறு பேருக்குமேல் கலந்துகொண்டதாகவும் செய்தியொன்று வைரலாக்கப்பட்டிருப்பதை அந்த ஆலயம் மறுத்திருக்கிறது. அது உண்மை என்பதும் வெளியாகியிருக்கிறது அப்படி நடந்திருக்கும் சாத்தியம் மறுக்கப்படவில்லை.
அந்தத் திருமணப் படங்கள் பழையவை என அந்த ஆலயம் கூறியிருந்தது. நேற்று நடந்த திருமணம் என்பதில் உண்மை இல்லை என்று ஆலயப் பராமரிப்பாளர் தெரிவித்தாக ஶ்ரீ கெம்பாங்கான் போலீசார் கூறியிருப்பதோடு விசாரித்துவருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் உண்மை வெளிச்சமாகியிருக்கிறது.
இந்து ஆலயங்கள் அரசின் ஆணையை மதிக்கவேண்டும். சமய அத்துமீறல்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றதாக இதுவரை தகவல்கள் இல்லை. உலகமெங்கும், உயர்வான தத்துவார்த்தங்களைக் கொண்டிருக்கும் இந்து ஆலயங்களில் தவறான சிந்தனைகளுக்கும் இடமில்லை. அரசோடு இணங்குவதை ஆண்டவன் வாக்காக மதிக்கும் பண்பைக் கொண்டிருக்கின்றன. ஆலயங்களுக்குத் தீங்கிழைத்தவர்களே வரலாற்றில் அதிகம். அதில் வதந்திகளும் புதிதாக இடம்பெற்றிருப்பதில் புதுமை இல்லை. உண்மைகூட வதந்திகளாவது உணடு.
வதந்திகள் பரப்புவது குற்றம். ஆனாலும் விளையாடிப் பார்பவர்களுக்கு இது ஓர் ஆபத்தான விளையாட்டு.