உயிர் நிழல்

தூரம், ஆனால் தூரமில்லை. இதுதான் இவ்வாண்டின் நோன்புப்பெருநாளின் தத்துவமாக இருக்கிறது.

மனிதர்கள் அற்புதமான அறிவாற்றல் உடையவர்கள். அதை நலவழியில் பயன்படுத்தமுடியும். அதுபோலவே தீய வழியிலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். தீய வழியில் என்பது கொரோனா சிந்தனையாளர்களின் மூளை. எப்படியெல்லாம் தீயவற்றைச்செய்து அதில் குளிர் காயமுடியும் என்ற சிந்தனையுள்ளவர்கள். இப்படிப்பட்டவர்கள் இல்லாத இடமில்லை. நாடுமில்லை. உலகமுழுவதும் அறிவிலித்தனம் பெருகிவருவத்ற்கு இவர்களே காரணம்.

அறிவுள்ளவர்கள் இதற்கு நேர்மறையானவர்கள். அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ரும் அறழிகள் பற்றிச் சிந்திக்கின்றவர்கள்.  அவர்களின் சிந்தனை அனைத்தும் பிறவிப்பயனை அடைவதுதான்.

பிறவிப்பயன் என்பது என்ன?

மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருத்தர் மற்றவருக்கு உதவுதுதான். தீங்கிழைப்பது அல்ல. இதைத்தான்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

என்று கூறுகின்றனர். நல்லவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள்  உலகில் அதிகமில்லை. ஆனாலும், அவர்களால்தான் நன்மை கிடைக்கிறது. அவர்களின் புண்ணியத்தால்தான் மழையே பெய்கிறது. மக்கள் பட்டினியின்றை வாழ்கிறார்கள்.

இன்றைய நிலையில் தீங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. இது அறுவடையாகும்போல் இருந்தாலும் வெற்றிபெறாது. மகான்களும் சித்தர்களும் ஞானிகளும் வாழும் பூமியில் அவர்களே கேடயமாக இருக்கிறார்கள். கேடயமாக இருந்து மக்களைக் காக்கின்றார்கள். அதனால் துன்பம் வருவதுபோல் இருக்கும். வராது என்பதுதான் பதிலாக இருக்கிறது.

அவர்களின் அவதாரங்களாய் இருக்கின்றவர்கள் நாட்டின் மூன்னணிப் பணியாளர்கள். அவர்களின் சேயாய்க் காக்கும் ஓயாப்பணியால் உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது முயற்சிகள் தீவிரமாகிவருகின்றன. அதன் பேர் மருத்துவம்.

நோன்புப்பெருநாள் என்பதும் மிக முக்கியானது. குடும்ப உறவுகளை இணைக்கின்ற நாளாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அப்படியில்லை. மனிதர்களை வேட்டடையாடக் கிளம்பியிருக்கும் கொரோனாவிடமிருந்து தப்பிக்க கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையை வித்தித்திருக்கிறது அரசு. அதன் அறிவிப்புகள் யாவும் மக்களைக்காக்க ஒலிக்கும் முரசு.  குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. உண்மைதான். இந்தப்பிரிவி நிரந்தரமில்லை என்பதை

மக்களின் மதி நுட்பத்தால் உருவாக்கபட்ட காணொளிக் காட்சிகள் நிழல் உயிர்களை நிசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது நடப்பது மவுன யுத்தம்.  தற்காலிக  பிரிவினைதான். ஆனால்,  பிரிவில்லை. பாசம் , அன்பு. நேசம், நெருக்கம். உருக்கம் மிக மிக அதிகமாகியிருக்கிறது.

கொரோனா வென்றுவிட்டதாக நினைக்கிறது. மமதை வென்றதாக எக்காலத்தும் சரித்திரமில்லை. தர்மமே வெல்லும். பிரிவினைகளால் குடும்பங்கள் பிரிந்திருந்தாலும் அதிக பாசத்தோடு கூடுகின்ற நாள் தொலைவிலில்லை என்பது மட்டும் உண்மை.

கொரோனா மண்டியிடும். ஏனெனில் இன்னும் மகான்கள் வாழ்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here