தங்கத்தின் தரம் குறையாது

மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்துக்கொள்ளும் நேரமில்லை. குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இதைத்தான் மருத்துவம் எச்சரிக்கிறது.

அதனால்தான் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களைப் பொது இடங்களில் கூடுவதற்கு அரசு அல்லது சுகாதாரத்துறை அனுமதிப்பதில்லை. இது கட்டளை அல்ல, அரசின் கடமை. சுகாதரத்துறையின் அறிவியல் பூர்வமான மருத்துவ ஆலோசனை.

இன்று, நோன்புப் பெருநாளின் இரண்டாம் நாள். முதல் நாளில் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் 20 பேர் கூடுவத்ற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் நாளான இன்று குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை.

மக்கள், இத்தடையை நன்கு புரிந்துகொண்டுவிட்டால் கொரோனா பாதிப்பை தூரத்தில் நிறுத்திவைக்கமுடியும். இதில் அடம் பிடிப்பதும் மீறுவதும் அறிவான செயலாக இருக்காது.

ஒரு குடும்பத்தின் மூத்தவர்களாக பெற்றோர் இருப்பர். பெற்றவர்களை இழந்தவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும். மூத்தவர்கள் என்பது தாத்தா பாட்டியாகவும் இருக்கலாம்.  முத்தவர்களை old என்று சொல்வதற்குப்பதிலா gold என்று அழைப்பதும் இத்னால்தான். இவர்களுக்கு பிரத்தியேகச் சலுகைளை அரசு வழங்கி வருகிறது. இவர்கள் தங்கத்திற்கு ஈடாக மதிக்கப்படுகின்றனர். தங்கம் என்றாலே எறிந்துவிடும் மனிதர்கள் இல்லை. எந்த நாட்டிலும் இல்லை.  தங்கம் பாதுகாக்கப்படவேண்டிய பொருளாகிவிட்டது. அதற்குச் சறப்புத்தரம் உண்டு.

இன்றைய உலகமும் தங்கத்தைதான் பொருளாதாரக் கையிருப்பாக வைத்திருக்கிறது. இதைத்தான் உலக நாடுகள் பின்பற்றுகின்றன. அப்படிப் பார்க்கும்போது குடும்பமும் உலகம்தான். குடும்பம் என்ற உலகத்துக்கு மூத்தவர்கள் மிகவும் தேவை. மூதவர்கள்தாம் தங்கக் கையிருப்பு. மூத்தவர்களைப் பராமரிக்கும் வீட்டில் தெய்வம் வாழும் என்பார்கள்.

தெய்வத்திற்கு ஈடானவர்களைப் பாதுகாப்பது முக்கிய கடமைகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. அதனால்தான் கொரோனா தொற்று காலத்தில் மூத்தவர்களைப்பொது இடங்களுக்குக் கூட்டிப்போக வேண்டாம் என்று சுகாதரத்துறை எச்சரிக்கிறது.

மூத்தவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருக்கும் என்கிறது மருத்துவம். மருத்துவர்கள் முன்னணிப் பணியாளர்களாக இருந்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவர்களின் ஆலோசனை மிகவும்  அவசியமாகிறது.

குடும்பத்தினர் மூத்தவர்களை இழந்துவிடாமல் இருக்க வீட்டிலேயே வைத்திருங்கள். அவர்கள் வயதானவர்கள் என்பது மட்டுமல்ல. ஒவ்வொரு கும்பத்திற்கும் அவர்களே தங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here