தாமான் செலாயாங் முத்தியாரா எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 18 பேர் இணைந்து ராயா பெருநாளை கொண்டாடியுள்ளனர்.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஒரே வீட்டில் பலர் இருக்க கூடாது என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் சிலர் அதற்கு செவிசாய்காமல் அதே தவற்றை செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு சம்பவம் சில நிமிடங்களுக்கு முன்பு செலாயாங்கில் நிகழ்ந்துள்ளது. ஒரே வீட்டில் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை போலீஸார் வலைத்துப் பிடித்தனர். அங்கிருந்த அனைவரின் அடையாள அட்டைகளை போலீஸார் சோதனையிட்டனர்.
அவர்கள் அனைவரும் வீட்டில் ஒன்றாக 2ஆம் நாள் ராயா பெருநாளை கொண்டிக் கொண்டிருந்த வேளையில் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் கைது செயப்பட்டார். அவருக்கு 1,000 வெள்ளி கம்பாவ்ண்ட் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.