குவாந்தான்: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் கார் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறார்.
42 வயதான ஜெட்டி ஹரியந்தி ஹாசன் கூறுகையில் இந்த தண்டனை மற்றவர்களும் இதே குற்றத்தை செய்யக்கூடாது என்பதற்கான தண்டனையாக இருக்க வேண்டும் என்றும் அதே வேளை கணவருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
அவர் ஒரு நல்ல பொறுப்புள்ள மகன், கணவர் மற்றும் தந்தை. விபத்து நடந்தபோது, அவர் குடும்பத்திற்காக சம்பாதிக்க வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நாங்கள் 2011 இல் திருமணம் செய்துகொண்டபோது எனக்கு நினைவிருக்கிறது, அவர் ஒரு வீட்டை வாங்க விரும்பினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் ஜாலான் பிண்டாசான் குவாந்தானில் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக சென்று கொண்டிருந்த ஒருவர் மோதியதில் இர்வான் ஹெர்மன் கமாருடின் (வயது 41) தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் விபத்துக்கு முன்னர் மது அருந்தியதாக நம்பப்படுகிறது. 2016 முதல் ஆலம் ஃப்ளோரா எஸ்.டி.என் பி.டி.யுடன் மேற்பார்வையாளராக இருந்த இர்வான் ஹெர்மன், இங்குள்ள சுங்கை இசாப் பெர்டானாவிலுள்ள தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. ஒரு வணிகரான ஜெட்டி ஹரியந்தி, இரவில் வேலை செய்வது இர்வான் ஹெர்மனின் வழக்கம் என்று கூறினார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் நான்கு நாள் ரிமாண்ட் உத்தரவைப் பெற்றுள்ளனர். 42 வயதான அந்த நபர் மீதான ரிமாண்ட் உத்தரவை மாஜிஸ்திரேட் நஜ்வா ஹாஷிம் பிறப்பித்தார்.
சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44 (1) (பி) இன் கீழ் மேல் விசாரணைக்கு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளர், இது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் 20,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படும்.